குஜராத் கலவர ஆவண படத்துக்கு தடை விதித்தது போல் கோட்சே படத்துக்கும் தடை விதியுங்க.. மோடியை வலியுறுத்தும் அசாதுதீன்

 
லடாக்கில் 20 வீரர்கள் எப்படி இறந்தார்கள்? அரசாங்கத்திடம் கேள்வி கேட்க எங்களுக்கு உரிமை உள்ளது.. அசாதுதீன்

குஜராத் கலவர ஆவண படத்துக்கு தடை விதித்தது போல் கோட்சே படத்துக்கும் பிரதமர் மோடி தடை விதிக்க வேண்டும் என்று ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி வலியுறுத்தியுள்ளார்.

2002ம் ஆண்டில் குஜராத்தில் இந்து-முஸ்லிம் சமூகத்துக்கு இடையே நடந்த  மோதல் குறித்து, இந்தியா: தி மோடி க்வஷின் என்ற 2 பாகம் கொண்ட ஆவணப் படத்தை பிபிசி உருவாக்கியது. இந்த ஆவணத்தின் முதல் பாகம் அண்மையில் வெளியானது. அதில், குஜராத்தில் கலவரத்தில் அப்போது முதல்வராக இருந்த நரேந்திர மோடிக்கு நேரடி தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. இது சர்வதேச அளவில்  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப் படத்தை தடை செய்யுமாறு யூடியூப் மற்றும் டிவிட்டர் வலைதளத்தை மத்திய அரசு கேட்டுக்கொண்டது. இதனையடுத்து அந்த நிறுவனங்கள் ஆவணப்படம் தொடர்பான லிங்குகளை நீக்கின. 

பிபிசி, மோடி

பிபிசியின் ஆவண படத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். மேலும் மத்திய அரசின் தடை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது அசாதுதீன் ஓவைசி கோட்சே படத்தையும் தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி கூறியதாவது: பிரிட்டிஷ் சட்டங்களின் அடிப்படையில் இந்தியாவில் டிவிட்டர் மற்றும் யூடியூப்பில் பிபிசி நேர்காணலுக்கு மோடி அரசு தடை விதித்துள்ளது. நாங்கள் மோடியிடம் கேட்கிறோம். குஜராத் கலவரத்தில் விண்வெளியில் இருந்தோ அல்லது விண்ணிலிருந்தோ யாரோ மக்களை கொன்றார்களா?. 

கோட்சே

இந்த நிகழ்ச்சிக்கு பா.ஜ.க. தடை விதித்துள்ளது. நான் பிரதமர் மற்றும் பா.ஜ.க. தலைவர்களிடம் கேட்கிறேன், காந்தியை கொன்ற கோட்சே பற்றி உங்கள் கருத்து என்ன?. இப்போது கோட்சேவை வைத்து ஒரு படம் வருகிறது. கோட்சேவை வைத்து எடுக்கப்படும் படத்தை பிரதமர் தடை செய்வாரா? கோட்சே திரைப்படத்தை தடை செய்யுமாறு பா.ஜ.க.வுக்கு சவால் விடுகிறேன். ஜனநாயகத்தின் தாயில் ஜி20 என்ற தலைப்புடன் டெல்லியில் ஜி20 போஸ்டர்கள் உள்ளன. யூடியூப்பில் (பிபிசி ஆவணபடத்துக்கு) தடை உள்ளது. கோட்சேவுக்கும், சாவர்க்கருக்கும் இடையே வெவ்வேறு வகையான காதல் (அன்பு) இருந்தது. காந்தி படுகொலை செய்யப்பட்ட ஜனவரி 30ம் தேதிக்கு முன்னர் கோட்சே திரைப்படத்தை பிரதமர் மோடி தடை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.