பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருந்தால், அரசு வேலைகளை மத்திய, மாநில அரசுகள் குறைப்பது ஏன்?.. அரவிந்த் கெஜ்ரிவால்

 
தேவையில்லாமல் வாய் விட்டு சிங்கப்பூரிடம் வாங்கி கட்டிக்கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால்!

பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருந்தால், அரசு வேலைகளை மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு ஏன் குறைக்கிறது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பினார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: நிரந்தர அரசு பணி குறைக்கப்பட்டு, அதிகளவிலான தற்காலிகப் பணியாளர்கள் பணியமர்த்தப்படும் நேரத்தில், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் 8,736 ஆசிரியர்களின் பணியை முறைப்படுத்தினார் (நிரந்தரம்). இது மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும். டெல்லியில் கெஸ்ட் ஆசிரியர்களை முறைப்படுத்துவதற்கான மசோதாவை டெல்லி அரசு சட்டப்பேரவையில் கொண்டு வந்தது ஆனால் அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. 

பகவந்த் மான்

டெல்லியில் கல்வி புரட்சியானது கெஸ்ட் மற்றும் வழக்கமான ஆசிரியர்களின் முயற்சியால் ஏற்பட்டது. நிரந்தர பணியாளர்கள் கடமையை தவிர்க்கும் நபர் என்ற கருத்து தவறானது. எங்களது வழக்கமான (நிரந்திர) மருத்துவமனை ஊழியர்கள் டெல்லியின் மருத்துவமனைகள் மற்றும் மொஹல்லா கிளினிக்குகளில் அதிசயங்களை செய்தனர். டெல்லியில் உள்ள இந்த வழக்கமான ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்கள் கல்வி மற்றும் சுகாதார சேவைகளில் புரட்சியை ஏற்படுத்த எங்களுக்கு உதவினார்கள். 

டெல்லி அரசு பள்ளி

ஒப்பந்த வேலை முறை மிகவும் சுரண்டல். பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருந்தால், அரசு வேலைகளை மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு குறைக்கிறது. அனைத்து மாநில அரசுகளும் தங்கள் தற்காலி ஊழியர்களின் சேவைகளை முறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். எங்கள் அரசாங்கங்கள் எங்கு அமைந்தாலும் நாங்கள் தற்காலிக ஊழியர்களை முறைப்படுத்துவோம் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.