#BREAKING நம்பிக்கை வாக்கெடுப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி!

 
tn

டெல்லி சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை கோரும்  வாக்கெடுப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு வெற்றி பெற்றுள்ளது.

aravind

தலைநகர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது.  கடந்த 2020 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் சுமார் 62 இடங்களில் வெற்றி பெற்று தனித்து பெரும்பான்மையுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடித்தது . இதைத் தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் முதலமைச்சராக பதவி ஏற்றார்.  எம்எல்ஏக்களை பாஜக தன் பக்கம் இழுத்து வருவதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்த நிலையில் டெல்லி சட்டப்பேரவையில் பெரும்பான்மையின் நிரூபிக்க உள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

tn

அதன்படி டெல்லி சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது.  இக்கூட்டத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தன்னுடைய அரசின் மீதான நம்பிக்கை தீர்மானத்தை கொண்டு வந்தார். இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இன்று சட்டப்பேரவையில் இருந்த 58 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 62 பேரில் 58 எம்எல்.ஏக்கள் குரல் வாக்கெடுப்பில் பங்கேற்றனர்.  பாஜக எம்.எல்.ஏ.க்கள் அவையில் இல்லாததால், நம்பிக்கை தீர்மானத்திற்கு எதிராக யாரும் வாக்களிக்கவில்லை. இதன் மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு வெற்றி பெற்றுள்ளது.