80 சதவீத அரசு பள்ளிகளின் நிலை குப்பை கிடங்கை விட மோசமாக உள்ளது... பிரதமர் மோடிக்கு கெஜ்ரிவால் கடிதம்

 
தேவையில்லாமல் வாய் விட்டு சிங்கப்பூரிடம் வாங்கி கட்டிக்கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால்!

80 சதவீத அரசு பள்ளிகளின் நிலை குப்பை கிடங்கை விட மோசமாக உள்ளது என்று பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தினமான கடந்த 5ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி, ரைசிங் இந்தியாவுக்கான பிரதான் மந்திரி பள்ளிகள் திட்டத்தின் கீழ், இந்தியா முழுவதும் 14,500 பள்ளிகளின் வளர்ச்சி மற்றும் தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்தார். 14,500 பள்ளிகளை நவீனமயமாக்கும் பிரதமர் மோடியின் முடிவு, கடலில் ஒரு துளி நீர் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம் செய்துள்ளார். 

மோடி

பிரதமர் மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் தினமும் 27 கோடி மாணவர்கள் பள்ளிக்கு செல்கிறார்கள். அதில் 18 கோடி மாணவர்கள் அரசு பள்ளிகளுக்கு செல்கின்றனர். 80 சதவீத அரசு பள்ளிகளின் நிலை குப்பை கிடங்கை விட மோசமாக உள்ளது. நமது கோடிக்கணக்கான குழந்தைகளுக்கு இது போன்ற கல்வியை வழங்கினால், நாடு எப்படி வளர்ச்சியடையும் என்று கற்பனை செய்து பாருங்கள். 

அசாம் அரசு பள்ளி

நீங்கள் 14,500 பள்ளிகளை நவீனமயாக்க திட்டம் வகுத்துள்ளீர்கள் ஆனால் இந்த வேகத்தில் செயல்பட்டால் நமது அனைத்து அரசு பள்ளிகளையும் தரம் உயர்த்த 100 ஆண்டுகள் ஆகும். நாட்டில் உள்ள 10 லட்சம் அரசு நடத்தும் பள்ளிகளை மறுசீரமைப்பதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில்  தெரிவித்துள்ளார்.