அஞ்சலியும் நானும் போதையில் இருந்தோம் - தோழி நிதி வாக்குமூலம்

 
aன்

காருக்கு கீழ் ஸ்கூட்டியுடன் சிக்கிய இளம்பெண் 13 கிலோமீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு ஆடை முழுவதும் கிழிந்து உடல் முழுவதும் கிழிந்து மரணம் அடைந்திருக்கிறார்.  டெல்லியில் நடந்த இந்த சம்பவம் நாடெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன. 

 உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவின் பேரில் இளம் பெண் அஞ்சலியின் மரணம் குறித்து விரிவான அறிக்கையை அளிக்கும்படி டெல்லி  காவல் துறை ஆணையரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. 

 அஞ்சலிக்கு பிரேத பரிசோதனை நடந்திருக்கிறது.  பிரேத பரிசோதனைகள் முடிவில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்படவில்லை என்பதும்,  காரில் பல கிலோமீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டதில் மட்டுமே மரணமடைந்திருக்கிறார் என்பதும் தெரிய வந்திருக்கிறது . 

ட்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அஞ்சலியின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்திருக்கிறார்.  சம்பவம் நடந்தபோது அஞ்சலியுடன் மற்றொரு பெண்ணும் பயணம் செய்திருக்கிறார் . அஞ்சலி ஸ்கூட்டி பின்புறம் அமர்ந்திருந்த போது அவரது தோழி நிதிதான் ஸ்கூட்டியை ஓட்டிச் சென்றிருக்கிறார்.  இவர்கள் இருவரும் ஓட்டலை விட்டு வெளியே வரும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி இருக்கின்றன .

அஞ்சலியும் தோழி நிதியும் அதிகாலை 1.30 மணி அளவில் ஹோட்டல் விட்டு வெளியே வரும் காட்சிகள் உள்ளன.  ஆனால் விபத்து நடந்தது அதிகாலை 3 மணி. இடைப்பட்ட நேரத்தில் இவர்கள் எங்கு சென்றார்கள் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.  இருவருமே மது போதையில் இருந்திருக்கிறார்கள்.  மதுபோதையில் இருவரும் தகராறு செய்த போது ஹோட்டல் உரிமையாளர் இருவரையும் வெளியேற்றி இருக்கிறார் என்பதும் தெரிய வந்திருக்கிறது.

 சம்பவம் குறித்து அஞ்சலியின் தோழி நிதி அளித்திருக்கும் பேட்டியில்,   அஞ்சலி குடிபோதையில் இருந்த போது ஸ்கூட்டி ஓட்ட வேண்டும் என்று என்னிடம் வற்புறுத்தினார்.   ஸ்கூட்டியில் போகும் போது கார் எங்கள் மீது மோதியது.  அதில் நான் ஒரு புறம் விழுந்து விட்டேன்.  காரின் அடியில் அஞ்சலி சிக்கிக்கொண்டார். காரின் அருகில் அஞ்சலி சிக்கிக்கொண்டார் என்பது காரில் இருந்தவர்களுக்கு தெரியும்.  ஆனால் அவர்கள் காரை நிறுத்தாமல் ஒட்டிக்கொண்டு சென்றார்கள்.  இதில் நான் பயந்து விட்டேன்.  போலீசுக்கு எதுவும் தெரிவிக்காமல்,  அஞ்சலியின் வீட்டுக்கும் எதுவும் சொல்லாமல் நான் என் வீட்டிற்கு சென்று விட்டேன் என்று கூறி இருக்கிறார்.