பிட் அடித்ததை ஆசிரியர் கண்டித்ததால் கோபம்.. மாணவர் எடுத்த விபரீத முடிவு... பதைக்க வைக்கும் வீடியோ..

 
பிட் அடித்ததை ஆசிரியர் கண்டித்ததால் கோபம்..  மாணவர் எடுத்த விபரீத முடிவு... பதைக்க வைக்கும் வீடியோ..

பள்ளியில் ஆசிரியர்கள் கண்டித்ததால், 10ம் வகுப்பு மாணவன் 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

பெங்களூருவில் 10ம் வகுப்பு படித்து வந்த மாணவன் மோஹின். இவர்  பள்ளியில் தேர்வின்போது காப்பியடித்து  ஆசிரியர்களிடம் மாட்டிக் கொண்டதாக தெரிகிறது. இதனையடுத்து  ஆசிரியர்கள்  மோஹினுக்கு கடுமையான தண்டனை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை வீட்டிற்கு திரும்பிய  மோஹின்,  வீட்டிற்கு செல்லும் வழியில் நாகவாரா என்ற பகுதியில் இருந்த  ஒரு அடுக்கு மாடி குடியிருப்பின் மாடிக்குச் சென்றுள்ளார். 14 தளங்களைக் கொண்ட அந்த கட்டிடத்தின் மேலிருந்து குதித்து  தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளான்.

பிட் அடித்ததை ஆசிரியர் கண்டித்ததால் கோபம்..  மாணவர் எடுத்த விபரீத முடிவு... பதைக்க வைக்கும் வீடியோ..

அப்போது கீழே விழாமல் மாடியில் உள்ள சுவற்றில் சிக்கிக்கொண்டு மோஹின் தொங்கிக் கொண்டிருந்தான். இந்நிலையில் அவனை காப்பாற்ற  குடியிருப்பில் வசித்துவருபவர்கள் மொட்டை மாடிக்குச் சென்றனர்.  அப்போது அவர்கள் மோஹினின் கையை பிடிக்க சென்ற நிலையில்,  உடனடியாக தனது கையை சுவற்றில் இருந்து விடுவித்து மோஹின்  கீழே விழுந்தான்.   இதில் மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்பின் மாடிக்கு மோஹின் எவ்வாறு சென்றான் என்பது தெரியவில்லை. இந்த தற்கொலை குறித்து சம்பிகே ஹள்ளி காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.