வெள்ளத்துக்கு மத்தியில் சகோதரியை தோளில் சுமந்து சென்று தேர்வெழுத வைத்த பாசக்கார அண்ணன்கள்

 
flood

விஜயநகரம் மாவட்டத்தில் பணி நிமித்தமான தேர்வில் பங்கேற்பதற்காக ஆர்ப்பரித்து செல்லும் ஆற்று வெள்ளத்தில் சகோதரியை தோளில் சுமந்து கடந்து சென்ற சகோதரர்களின் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Vizianagaram: Girl Wades Through Swollen River to Write Exam

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில்  சம்பவவதி ஆற்றில் ஒவ்வொரு ஆண்டும் மழை காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம். ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது அங்குள்ள உள்ள கிராம மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கும், மருத்துவமனைக்கும் செல்ல உயிரை கையில் பிடித்து ஆற்றைக் கடக்க கூடிய நிலை தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் மழைக்காலங்களில் ஆந்திரா அனையில் இருந்து மதகுகள் திறக்கப்பட்டு ஆற்றில் தண்ணீர் வெளியேற்றப்படுவதால்  அந்த பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளும், பணி நிமித்தமாக செல்லவும், மருத்துவமனைக்கு செல்ல ஆற்றில் கடந்து சென்று உயிர் இழந்த சம்பவமும் நடைபெற்றுள்ளது. 

இந்நிலையில் இரண்டு நாட்களாக நீர்வரத்து அதிகரித்து உள்ள நிலையில்  விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் மெண்டடா மண்டலம், மரிவலசை சேர்ந்த கிராமத்தை சேர்ந்த கலாவதி என்ற இளம்பெண் 10ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடக்கும் பதவி உயர்வுக்கான தகுதி தேர்வுக்கு செல்ல வேண்டும். வெள்ளம் ஆர்ப்பரித்து சென்று கொண்டிருந்த நிலையில்  அவரது சகோதரர்கள் ராமகிருஷ்ணா, சங்கர் ராவ் உதவியுடன் தண்ணீரில் ஆபத்தான முறையில் ஆற்றைக் கடந்து சென்று தேர்வில் பங்கேற்றார். இதுகுறித்து ராமகிருஷ்ணா கூறுகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்பொழுது தங்கள் கிராமத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் பணி நிமித்தமாக செல்பவர்கள் மருத்துவமனைக்கு செல்லக்கூடியவர்கள் அபாயகரமான ஆற்றை கடந்து செல்லக்கூடிய நிலை ஏற்படுகிறது. ஒரு சிலர் செல்ல முடியாத நிலையில் வீட்டிலேயே உயிரிழப்பும், ஆற்றைக் கடந்து சென்று சிலர் உயிரிழந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 

சுமார் பல ஆண்டுகளுக்கு மேலாக தாங்கள் இந்த  நரக வேதனையை அனுபவித்து வருகின்றோம். எங்கள் கிராமம் மட்டும் இல்லாமல் இந்த பகுதியில் 10 கிராமங்களுக்கு இதே நிலை ஏற்பட்டுள்ள நிலையில் தங்களுக்கு மேம்பாலம் அமைத்து தங்கள் 10 கிராம மக்களை அரசு காப்பாற்ற வேண்டும். எந்த அரசு வந்தாலும் தங்கள் கிராமங்களை பற்றி கண்டுகொள்ளாமல் உள்ள நிலையில் கட்சிப் பாகுபாடுகள் இல்லாமல் தங்கள் கிராமத்தை இணைக்கக்கூடிய மேம்பாலத்தை ஆற்றின் நடுவே அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.