ஆனந்த் மனைவியின் அக்னி பரீட்சை! நீ பத்தினியா? என்று சந்தேகப்பட்டதால் நேர்ந்த துயரம்!

 
சே

சீதாவின் அக்னி பரீட்சை இன்றும் தொடர்கிறது.   நீ பத்தினி என்றால் கையில் சுத்த கற்பூரம் ஏற்றி காட்டு என்று சொன்ன கணவனின் சந்தேகத்தை போக்க மனைவி  கையில் சூடம் ஏற்றிக்கொள்ள கை முழுவதும் வெந்துபோக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 கர்நாடக மாநிலத்தில் கோலார் மாவட்டத்தில் இருக்கும் வீரனஹள்ளி கிராமம்.   இக்கிராமத்தில் வசித்து வரும் ஆனந்த் என்பவர் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். 

ஓ

 கணவன்- மனைவி இருவரும் ஒற்றுமையாக 14 நான்கு ஆண்டுகள் வாழ்ந்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு இருக்கிறார் ஆனந்த்.   இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.

 கடந்த வாரம் இந்த தகராறு முற்றிப் போயிருக்கிறது. அப்போது,  ‘’ நீ உண்மையிலேயே பத்தினி என்றால் கையில் கற்பூரம் ஏற்றி காட்டு?’’ என்று ஆனந்த் ஆவேசமாக சொல்ல,   மனைவியும் ஆத்திரத்தில் என்ன செய்வதென்றே தெரியாமல்,   இதற்கு மேல் வேறு வழியில்லாமல்,   கணவன் மீதுள்ள சந்தேகத்தை போக்குவதற்கு வேறு வழியில்லை என்று  அவரும் முடிவெடுத்திருக்கிறார்.

 தன் உள்ளங்கையில் சூடத்தை ஏற்றி காட்டியிருக்கிறார்.   அப்போது திடீரென்று கை முழுவதும் தீ பரவியிருக்கிறது.   இதில் மனைவி அலறி துடித்திருக்கிறார்.  இதை பார்த்து விட்டு  மனைவிக்கு சிகிச்சை அளிக்க உதவி செய்யாமல் தப்பி ஓடியிருக்கிறார். 

 அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.  சம்பவம் குறித்து அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அப்பெண்ணின் கணவர் ஆனந்தை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.