மணிப்பூர் மாநிலத்தில் திடீர் நிலநடுக்கம் - மக்கள் பீதி!

 
earth

மணிப்பூர் மாநிலம் மொய்ராங் பகுதியில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறு வீதிகளில் தஞ்சமடைந்தனர். 

மணிப்பூர் மாநிலம் மொய்ராங் என்ற பகுதியில் இன்று காலை 10.02 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.5 என்ற அளவில் பதிவாகி இருப்பதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மொய்ராங்கிற்கு தென்கிழக்கே 100 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையம் கொண்டிருந்ததாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.  நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த முழு விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் பெரிய அளவிலான சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியே வந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தின் அதிர்வுகளால் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த பல பொருட்கள் குலுங்கியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.