நாட்டின் விடுதலைக்கு காங்கிரஸ் தலைமையிலான இயக்கம் பெரும் பங்காற்றியுள்ளது, ஆனால்... அமித் ஷா பேச்சு

 
அமித் ஷா

நாட்டின் விடுதலைக்கு காங்கிரஸ் தலைமையிலான இயக்கம் பெரும் பங்காற்றியுள்ளது. ஆனால் வேறு யாரும் பங்களிக்கவில்லை என்ற இந்த கதை சரியல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

டெல்லியில் நேற்று சஞ்சீவ் சன்யால் எழுதிய புரட்சியாளர்கள், இந்தியா எப்படி சுதந்திரம் பெற்றது என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா கலந்து கொண்டார். அந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா  பேசுகையில் கூறியதாவது: புத்தகத்தின் தலைப்பில் உள்ள மற்றொரு கதை என்ற வார்த்தை, சுதந்திர போராட்டத்தில் பலரின் பங்களிப்புகளின் மற்ற கண்ணோட்டத்தை முன்வைக்கும் புத்திகத்தின் சுருக்கம்.

புரட்சியாளர்கள் புத்தகம்

வரலாறு எழுதுதல் மற்றும் கல்வி மூலம் ஒரு தோற்றம் பொதுமக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. திணிக்கப்பட்ட கண்ணோட்டம், அகிம்சை போராட்டத்திற்கு சுதந்திர போராட்டத்தில் பங்கு இல்லை என்றோ, வரலாற்றின் ஒரு பகுதி இல்லை என்றோ நான் கூறவில்லை. இது வரலாற்றின் ஒரு பகுதி மற்றும் மிகப்பெரிய பங்களிப்பை கொண்டுள்ளது. 

காங்கிரஸ்

நாட்டின் விடுதலைக்கு காங்கிரஸ் தலைமையிலான இயக்கம் பெரும் பங்காற்றியுள்ளது. ஆனால் வேறு யாரும் பங்களிக்கவில்லை என்ற இந்த கதை சரியல்லை. ஏனெனில் நாட்டின்  சுதந்திரத்தை நாம் ஆராய்தால், ஏராளமான மக்கள், அமைப்புகள், சித்தாங்தங்கள் மற்றும் பாதைகள் ஒரு இலக்கை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இவை அனைத்தின் கூட்டு விளைவுதான் இந்தியாவின் சுதந்திரம்.