2024க்குள் பொது சிவில் சட்டத்தை மாநிலங்கள் அமல்படுத்தும், இல்லையென்றால் நாங்கள் செயல்படுத்துவோம்.. அமித் ஷா உறுதி

 
அமித் ஷா

2024க்குள் சில மாநிலங்களை தாங்களாகவே பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும், இல்லையென்றால் நாங்கள் அதை செயல்படுத்துவோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

டெல்லியில் நடைபெற்ற தனியார் செய்தி நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில் கூறியதாவது: சட்டப்பிரிவு 370 காரணமாகத்தான் ஜம்மு அண்ட் காஷ்மீர் இந்தியாவுடன் உள்ளது என்று கூறப்பட்டது. இப்போது சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ ஆகியவை இல்லை ஆனால் ஜம்மு அண்ட் காஷ்மீர் இன்னும் இந்தியாவுடன் உள்ளது. சுமார் 30 ஆயிரம் கிராம தலைவர்கள் மற்றும் துணை தலைவர்கள் அங்கு ஜனநாயக இயக்கத்தை வழிநடத்துகிறார்கள். ரூ.56 ஆயிரம் கோடி மதிப்புள்ள முதலீடு வந்துள்ளது, 80 லட்சம் சுற்றுலா பயணிகள் யூனியன் பிரதேசத்துக்கு (ஜம்மு அண்ட் காஷ்மீர்) வருகை தந்துள்ளனர் இது சுதந்திரதிற்கு பிறகான காலத்தில் அதிக எண்ணிக்கையாகும்.  காஷ்மீருக்கான சிறப்பு சட்டப்பிரிவு நீக்கம்ஜம்மு அண்ட் காஷ்மீரின் தாய்மொழிகள் மாநில மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித்துக்கள் முதன் முறையாக இடஒதுக்கீடு  பலன்களை பெற்றுள்ளனர். இப்போது ஒவ்வொரு வீட்டுக்கும் மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்புகள் உள்ளன. ஜம்மு அண்ட் காஷ்மீர் புதிய உயரங்களை எட்டுகிறது. 1990களில் இருந்து, பயங்கரவாதம் மிகக்குறைந்த நிலையில் உள்ளது மற்றும் கல் வீச்சு சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. ஜம்மு அண்ட் காஷ்மீர் செழித்து வருகிறது. 

பொது சிவில் சட்டம்

பா.ஜ.க.வை தவிர வேறு எந்த கட்சியும் பொது சிவில் சட்டத்துக்கு ஆதரிக்கவோ அல்லது ஆதரவாகவோ பேசவில்லை. இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் குஜராத் மாநிலங்களில் ஆளும் பா.ஜ.க. அரசுகள் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக குழு அமைத்து, குழு ஆலோசனை நடத்தி வருகிறது. பெறப்படும் பரிந்துரைகளின்படி நமது அரசுகள் செயல்படும். பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் பா.ஜ.க. உறுதியாக உள்ளது என்பதை பார்வையாளர்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். சில மாநிலங்கள் தாங்களாகவே பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தலாம். ஆனால் அதற்குள் அது நடக்கவில்லை என்றால், 2024ல் மீண்டும் நாங்கள் (பா.ஜ.க.) மீண்டும் ஆட்சிக்கு வருவோம், பிறகு அதை செயல்படுத்துவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.