நரேந்திர மோடி அரசு மக்களின் நன்மைக்காக கொள்கைகளை உருவாக்கியது, மக்களை மகிழ்விக்க அல்ல.. அமித் ஷா தகவல்

 
அமித் ஷா

நரேந்திர மோடி அரசு ஒருபோதும் மக்களை மகிழ்விக்கும் கொள்கைகளை உருவாக்கவில்லை ஆனால் மக்களின் நன்மைக்காக கொள்கைகளை உருவாக்கியது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில் கூறியதாவது: நரேந்திர மோடி பிரதமரான பிறகு இந்த நாட்டில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக வாக்கு வங்கிகளை கருத்தில் கொண்டு கொள்கைகள் உருவாக்கப்பட்டன. நரேந்திர மோடி அரசு ஒருபோதும் மக்களை மகிழ்விக்கும் கொள்கைகளை உருவாக்கவில்லை ஆனால் மக்களின் நன்மைக்காக கொள்கைகளை உருவாக்கியது. சரக்கு மற்றும் சேவை வரியை கொண்டு வரும்போது, நமது எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு இயற்கையானது. 

சரக்குகள் மற்றும் சேவைகள் வரி

நாம் டிபிடி (நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்குக்கு பணம் பரிமாற்றம்) கொண்டு வந்தபோது பெரிய எதிர்ப்பு வந்தது. இடைத்தரகர்கள் அதை விரும்ப மாட்டார்கள் என்பது தெளிவாக தெரிந்தது. அதேபோன்று, மத்திய அரசால் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் கடினமானதாக இருக்கலாம், ஆனால் மக்களின் நலனுக்காகவே இருந்தன. நான் இதைச் சொல்கிறேன், ஏனென்றால் நீங்கள் கொள்கையை புரிந்து கொள்ள வேண்டும் என்றால், கொள்கைகளை உருவாக்கும்போது அடிப்படைக் கொள்கைகளையும் புரிந்து கொள்ள வேண்டும். கொள்கைகளை உருவாக்கும்போது வாக்கு வங்கியை பற்றி நாங்கள் ஒருபோதும் சிந்தித்ததில்லை, ஆனால் பிரச்சினைக்கு தீர்வு காண்போம். 

மோடி

மோடி அரசு பிரச்சினைகளை துண்டு துண்டாக பார்தததில்லை. முன்பு அடிப்படை பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வுகளை கருத்தில் கொண்டு கொள்கைகள் உருவாக்கப்படவில்லை. மோடி அரசாங்கம் கொள்கைகளின்  அளவுகோல் மற்றும் அளவையும் மாற்றியுள்ளது. பொது வசதிகளை பொறுத்தவரை, எங்களது நிர்வாகம் படிநிலையில் செயல்படுகிறது.. ஒவ்வொரு மட்டத்திற்கும் வெவ்வேறு சவால்கள் உள்ளன. அதிகாரிகள் வெவ்வேறு மட்டங்களில் இருந்து பெறப்பட்ட ஆலோசனைகளை அவர்களின் பார்வையில்  இருந்தும் பறவையின் பார்வையில் இருந்தும் பார்க்க வேண்டும். அதன் பிறகு அவர்கள் தங்கள் பகுதிகளில் நல்லாட்சிக்கான மந்திரங்களை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.