பாதுகாப்பு துறை, உள்துறை அதிகாரிகளுடன் அமித் ஷா முக்கிய ஆலோசனை

 
amit shah

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா தொடர்புடைய இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தி வரும் நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், மத்திய உள்துறை செயலாளர், தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) இயக்குனர் ஆகியோருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

நாட்டின் 13 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா,  எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் தொடர்புடைய இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது. தீவிரவாத அமைப்புக்கு நிதி திரட்டி தருவது  தொடர்பாக அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பாப்புலர்  ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை நிர்வாகிகள் இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, மதுரை ,திண்டுக்கல் ,கடலூர் ,தேனி, ராமநாதபுரம், தென்காசி ,கோவை ஆகிய மாவட்டங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினருக்கு தொடர்புடைய 60 இடங்களில் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் போராட்டங்களில் ஈடுபட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், டெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், மத்திய உள்துறை செயலாளர், தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) இயக்குனர்  ஆகியோருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். .நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ.) அமைப்பிற்குச் சொந்தமான இடங்கள், வீடுகளில் என்ஐஏ சோதனை நடைபெற்று வரும் நிலையில், இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.