நீரா ராடியா மீதான அனைத்து வழக்குகளும் ரத்து.. வழக்கை கைவிடுவதாக சிபிஐ அறிவிப்பு..

 
நீரா ராடியா மீதான அனைத்து வழக்குகளும் ரத்து.. வழக்கை கைவிடுவதாக சிபிஐ அறிவிப்பு..

நீரா ராடியா மீதான  14 வழக்குகளையும் ரத்து செய்வதாக சிபிஐ அறிவித்துள்ளது. அவரது தொலைபேசி உரையாடல்களை ஆய்வு செய்ததில் எந்தவிதமான குற்ற நோக்கமும் இல்லை என்பது தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

supreme court

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில்,  தொழிலதிபர்களின் சார்பில்  மத்திய அமைச்சக அதிகாரிகள் உள்ளிட்ட பலரிடம் நீரா ராடியா தொலைபேசியில் உரையாடியதாக சர்ச்சை புகார் எழுந்தது. அத்துடன்  அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள், அதிகாரிகள் என பெரும் புள்ளிகளோடு நீரா ராடியா பேசியதாக ஆடியோ வெளியாகி மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  இதனையடுத்து  அவருக்கு எதிராக  வருமான வரித்துறை 14 வழக்குகளை பதிவு செய்து,  முதற்கட்ட விசாரணையை தொடங்கியது.  அத்துடன்  நீரா ராடியாவின் 8,000 தொலைபேசி உரையாடல்களும் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன.  அதில், நீரா ராடியா- தொழிலதிபர் ரத்தன் டாடா பேசிய ஆடியோ பதிவும் அடங்கும்.  இந்த ஆடியோ 2010ம் ஆண்டே ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை  பெரும் சர்ச்சையை  ஏற்படுத்தியது.  

நீரா ராடியா மீதான அனைத்து வழக்குகளும் ரத்து.. வழக்கை கைவிடுவதாக சிபிஐ அறிவிப்பு..

இதனையடுத்து  ஆடியோ  பதிவு கசியவிடப்பட்டது தன்னுடைய தன்னுடைய தனிமனித உரிமையை மீறும் செயல் என ரத்தன் டாடா உச்சநீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தார்.  பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது   8,000 தொலைப்பேசி உரையாடல்களையும் ஆய்வு செய்த நிலையில்,   முதற்கட்ட விசாரணையை கைவிடுவதாக சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்தது.  நீரா ராடியாவின் 8,000 தொலைபேசி உரையாடல்களிலும்  எந்தவிதமான குற்ற நோக்கமும் இல்லை என்றும்  சிபிஐ  தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்திய அரசியலை உலுக்கிய சர்ச்சை 12 ஆண்டுகளுக்கு பிறகு முடிவுக்கு வந்துள்ளது.