பாபர் மசூதி தீர்ப்புக்கு பிறகு நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இழந்து விட்டது.. முஸ்லிம் மதகுரு

 
சாஜித் ரஷிதி

பாபர் மசூதி தீர்ப்புக்கு பிறகு நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இழந்து விட்டது என்றும், ஞானவாபி மசூதி வழக்கு விசாரணைக்கு முன்னதாக  சாலையில் இறங்கு போராட்டம் நடத்த வேண்டும் என்று முஸ்லிம்களுக்கு மதகுரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஞானவாபி மசூதிக்கு எதிரான மனு  மீதான அடுத்த கட்ட விசாரணை வரும் வியாழக்கிழமை தொடங்க உள்ள நிலையில், ஞானவாபி மசூதி வழக்கு விசாரணைக்கு முன்னதாக,  சாலைக்கு வந்த போராட்டம் நடத்த வேண்டும் என்று முஸ்லிம்களுக்கு அகில இந்திய இமாம் சங்கத்தின் தலைவர் மௌலானா சாஜித் ரஷிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், பாபர் மசூதி தீர்ப்புக்கு பிறகு நீதிமன்றங்கள் மீது அவர்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்றும் மௌலானா சாஜித் ரஷிதி  தெரிவித்தார்.

முஸ்லிம்கள்

உத்தர பிரதேசம் ஞானவாபி மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள இந்து கடவுள் சிருங்கார கவுரி சிலையை தினமும் வழிபட அனுமதிகோரி, 5 இந்து பெண்கள் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனையடுத்து ஞானவாபி மசூதியை கள ஆய்வு செய்ய வாரணாசி மாவட்டம் நீதிமன்றம் உத்தரவிட்டது.  நீதிமன்றத்தின் உத்தரவுபடி களவு ஆய்வு செய்யப்பட்டது. அதேசமயம் மசூதி வளாகத்தை களஆய்வு செய்ய அனுமதி அளித்த வாரணாசி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மசூதி நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

ஞானவாபி மசூதி

இதற்கிடையே, ஞானவாபி மசூதிக்கு எதிரான மனு விசாரணைக்கு உகந்ததில்லை என்று மசூதி சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது மாவட்ட நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்தநிலையில், கடந்த 12ம் தேதி வாரணாசி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஞானவாபி மசூதிக்கு எதிரான மனு விசாரணைக்கு உகந்தது என்று வாரணாசி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை இம்மாதம் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தது.