சகோதரிகள் 3 பேரும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை

 
ட்ர்

 சகோதரிகள் மூன்று பேரும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காண்ட்வா மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

 மத்திய பிரதேச மாநிலத்தில் காண்ட்வா மாவட்டம் ஜாவர் காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட கோட்கேடி என்கிற கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.  உயிரிழந்த சகோதரிகள் லலிதா, சாவித்திரி, சோனு என்பது தெரிய வந்திருக்கிறது.

ட்

 மூன்று சகோதரிகளும் ஒரே நேரத்தில் மரத்தில்  தூக்கில் தொங்கியபடி இருந்ததால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிய வந்ததை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூன்று சகோதரிகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள் .

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.   மூன்று சகோதரிகளும் தற்கொலைக்கு முன்பாக கடிதம் எதுவும் எழுதி வைக்காததால்  எதற்காக அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது குறித்த காரணம் உடனடியாக தெரியவில்லை.   ஆனால் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.