2வது முறையாக நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கொரோனா!

 
akshay-kumar-34-23

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

akshay-kumar-34

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  அக்‌ஷய் குமார் கொரோனாவால் பாதிக்கப்படுவது இது  இரண்டாவது முறை. ஏற்கனவே  ஏப்ரல் 2021ல், அவர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டு தனிமையில் இருந்த நிலையில், மீண்டும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 


இந்நிலையில் நடிகர் அக்‌ஷய் குமா தனது ட்விட்டர் பக்கத்தில் ,  "கேன்ஸ் திரைப்பட விழாவில் உள்ள இந்திய பெவிலியனில் நமது சினிமா கால்பதிப்பதை உண்மையிலேயே எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக கொரோனா  உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனினும், விழாவில் பங்கேற்கும் குழுவிற்கு எனது வாழ்த்துகள். கேன்ஸ் விழாவில் பங்கேற்பதை நிறைய மிஸ் செய்வேன்" என்று தெரிவித்துள்ளார்.