எனது கனவுகள் அவ்வளவு பெரியவை அல்ல... வெளிப்படையாக பதில் அளித்த அகிலேஷ் யாதவ்

 
பொய்களை சொல்வதில் பா.ஜ.க. உலக சாதனை படைத்து வருகிறது…. அகிலேஷ் யாதவ் தாக்கு

எதிர்வரும் மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக நான் இருக்க மாட்டேன். எனது கனவுகள் அவ்வளவு பெரியவை அல்ல என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டி அளித்தார். அப்போது, 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக நீங்கள் இருப்பீர்களா என்பது உள்பட செய்தியாளரின் கேள்விக்கு அகிலேஷ் யாதவ் பதிலளிக்கையில் கூறியதாவது: எதிர்வரும் மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக நான் இருக்க மாட்டேன். எனது கனவுகள் அவ்வளவு பெரியவை அல்ல. 

சமாஜ்வாடி

எதிர்வரும் மக்களவை தேர்தலில் கன்னோஜ் தொகுதியில் போட்டியிடுவேன். பா.ஜ.க.வுக்கு மக்கள் ஆதரவு உள்ளது என்பதை நான் முற்றிலும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அவர்கள் பிரச்சாரம் செய்யும் விதத்தில், அவர்களுடன் யாரும் போட்டியிட முடியாது. அவர்களின் அரசியல் என்பது பிரிப்பது, சில சமயங்களில் இந்து-முஸ்லிம், சில சமயங்களில் எந்த சாதிக்கு எதிராகவும் தூண்டி விடப்படுகிறது. 

பா.ஜ.க.
பிரிட்டிஷ்காரர்களை போல் பிரித்து ஆட்சி செய்வது, சமூகத்தை பிளவுப்படுத்துங்கள், வாக்குகளை பெறுங்கள், அரசாங்கத்தை அமைக்கவும், பா.ஜ.க.வும் அதையே நம்புகிறது. அசம்கரில் வாக்குப்பதிவு நாளில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அனுமதிக்கப்படவில்லை. அசம் கானுக்கு நடந்தது எந்த அரசியல் தலைவரிடமும் இதைவிட மோசமாக இருக்க முடியாது. இந்த கேமரா பொய் சொல்லாது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர அனுமதிக்கப்படவில்லை.