உத்தர பிரதேசத்தில் இன்று அடியெடுத்து வைக்கும் ராகுல் காந்தியின் நடைப்பயணம்.. வாழ்த்து தெரிவித்த அகிலேஷ் யாதவ்

 
டெல்லிக்கு சென்றது ராகுல் காந்தியின் பாத யாத்திரை..  தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..

இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்க என்னை அழைத்ததற்கு நன்றி மற்றும் இந்திய ஒற்றுமை பிரச்சாரத்தின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் என்று ராகுல் காந்திக்கு அகிலேஷ் யாதவ் பதிலளித்துள்ளார்.

ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7ம் தேதியன்று கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை தொடங்கினார். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் தமிழ்நாடு,  கேரளா, கர்நாடகா, தெலங்கானா,மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களை இன்று உத்தர பிரதேசத்தில் நுழைகிறது. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் பங்கேற்று வருகின்றனர். அந்த வகையில் உத்தர பிரதேசத்தில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் நடைபெறும் போது பங்கேற்க வருமாறு சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி உள்ளிட்ட முக்கிய உத்தர பிரதேச எதிர்க்கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்து இருந்தது.

எந்த தேர்தலிலும் பா.ஜ.க.வுக்கு ஓட்டு போடுங்கன்னு என் கட்சி சொல்லவே இல்லை… மாயாவதி

ஆனால் ராகுல் காந்தியின் யாத்திரையில் அகிலேஷ் யாதவ், மாயாவதி  பங்கேற்க வாய்ப்பில்லை என தகவல் வெளியானது. இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி நேற்று டிவிட்டரில்,  இந்திய ஒற்றுமை நடைப்பயணத்துக்கு வாழ்த்துக்கள். ராகுல் காந்தியின் கடிதத்துக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்று பதிவு செய்து இருந்தார். மாயாவதியின் இந்த டிவிட், அவர் யாத்திரையில் பங்கேற்கமாட்டார் என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது. அதேசமயம், நடைப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன் என்பதை சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும்  மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

அகிலேஷ் யாதவ்
இது  தொடர்பாக அகிலேஷ் யாதவ் டிவிட்டரில், இந்திய ஒற்றுமை நடைப்பயணத்துக்கு என்னை அழைத்ததற்கு நன்றி மற்றும் இந்திய ஒற்றுமை பிரச்சாரத்தின் வெற்றிக்கு வாழ்த்துக்கள். இந்தியா ஒரு புவியியல் பரப்பை விட அதிகம்-அது அன்பு, அகிம்சை, இரக்கம், ஒத்துழைப்பு மற்றும் நல்லிணக்கத்தால் ஒன்றுபட்டது. இந்த யாத்திரை நம் நாட்டின் இந்த உள்ளடக்கிய கலாச்சாரத்தை பாதுகாக்கும். இலக்கை அடையும் என்று நம்புகிறேன் என பதிவு செய்துள்ளார்.