யாதவ், முஸ்லிம் வாக்காளர்கள் 20 ஆயிரம் பேர் நீக்கியதாக குற்றச்சாட்டு.. அகிலேஷ் யாதவிடம் ஆதாரம் கேட்ட தேர்தல் ஆணையம்

 
பொய்களை சொல்வதில் பா.ஜ.க. உலக சாதனை படைத்து வருகிறது…. அகிலேஷ் யாதவ் தாக்கு

ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் யாதவ், முஸ்லிம் வாக்காளர்கள் 20 ஆயிரம் பேர் நீக்கப்பட்டதாக அகிலேஷ் யாதவ் கூறிய குற்றச்சாட்டுக்கு, ஆதாரம் கொடுக்கும்படி அவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த உத்தர பிரதேச சட்டப்பேரவையில் பா.ஜ.க. பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று, தொடர்ந்து 2வது முறையாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமைத்தது. சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அம்மாநில சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவரானார்.

பா.ஜ.க.

கடந்த மாதம் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், தேர்தல் ஆணையம் வேண்டுமென்றே பா.ஜ.க. மற்றும் அதன் உதவியாளர்களின் உத்தரவின் பேரில், ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிகளிலும் யாதவர்கள் மற்றும் முஸ்லிம்களின் வாக்குகளில் 20 ஆயிரத்தை குறைத்தது. விசாரணை நடத்தினால், பலரது பெயர்கள் நீக்கப்பட்டது தெரிய வரும் என தெரிவித்தார். அகிலேஷ் யாதவின் இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தேர்தல் ஆணையம்

இந்நிலையில்  அகிலேஷ் யாதவ் கூறிய குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும்படி தேர்தல் ஆணையம்  நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் தனது குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரத்தை நவம்பர் 10ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. அகிலேஷ் யாதவ் தனது குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரத்தை அளிக்க தவறினால் தேர்தல் ஆணையம் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் என கூறப்படுகிறது.