மகன் உடல் மேல் 100 கிலோ உப்பை கொட்டி.. 8 மணி நேரம் காத்திருந்தும் உயிர்த்தெழவில்லை

 
sa

 நீரில் மூழ்கி உயிரிழந்து விட்ட மகனின் உடலை உப்பு குவியலில் வைத்தால் உயிர்த்தெழுந்து விடுவான் என்று நம்பி மகனின் உடல் மேல் 100 கிலோ உப்பை கொட்டி வைத்து எட்டு மணி நேரம் காத்திருந்துள்ளனர் பெற்றோர்.   உயிர்த்தெழாததால் அதிகாரிகள்,  போலீசார் வந்து சமாதானம் பேசி தகனம் செய்ய வைத்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் பெல்லாரி மாவட்டத்தில் நடந்திருக்கிறது இந்த சம்பவம்.

 பெல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் சுரேஷ் அந்த பகுதியில் இருக்கும் குட்டையில் குளிக்கச் சென்று இருக்கிறான்.  அப்போது திடீரென்று தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்கிறான்.    கிராம மக்கள் அந்த சிறுவனின் உடலை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

b

 மகன் இறந்த அதிர்ச்சியில் இருந்த பெற்றோர் மகனை உப்பு குவியத்தில் வைத்தால் உயிருடன் வந்து விடுவான் என்று நம்பி இருக்கிறார்கள்.   இதனால் 100 கிலோ உப்பை எடுத்து மகனின்  உடலில் மேல்கொட்டி இருக்கிறார்கள்.   தலை மட்டும் தெரியும் படி வைத்து உடல் முழுவதும் உப்பால் மூடி இருக்கிறார்கள். 

இந்த உப்பு குவியத்தால்   மகன் உயிர்த்தெழுந்து விடுவான் என்று 8 மணி நேரம் காத்திருந்திருக்கிறார்கள் .   இதற்குள் தகவல் அறிந்த போலீசாரும், அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று பெற்றோரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.   இனி தங்கள் மகன் உயிருடன் உயிர்த்தெழுவான் என்ற நம்பிக்கையை இழந்ததால் உடலை தகனம் செய்ய ஒப்புக்கொண்டனர். 

 இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.