அத்வானி பிறந்தநாள் : பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் வாழ்த்து..

 
அத்வானி பிறந்தநாள் : பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் வாழ்த்து..

 பாஜக மூத்த தலைவர் அத்வானியின் பிறந்தநாளையொட்டி, பிரதமர் மோடி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்..

பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு இன்று 95-வது பிறந்தநாளை கொண்டாடினார்.   இதையடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக,  இன்று காலை  டெல்லியில் உள்ள அத்வானி வீட்டுக்கு பிரதமர் மோடி நேரில் சென்றார்.  மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் அவருடன் சென்றார். அப்போது பிரதமர் மோடிக்கு,  அத்வானியின் மகள் பிரதிபா வரவேற்பு அளித்தார்.  அத்வானியை சந்தித்த பிரதமர் மோடி,  அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். பின்னர் அவர்கள் நீண்ட நேரம் உரையாற்றினார்கள்.. அவர்கள்  சிரித்து பேசியபடி இருக்கும் புகைப்படங்களும் வெளியிடப்பட்டன.  

அத்வானி பிறந்தநாள் : பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் வாழ்த்து..

மேலும், அத்வானிக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். அத்துடன் பாஜக தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.    பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா தனது ட்விட்டர் பதிவில், “'தேசம் மற்றும் அமைப்புக்காக அர்ப்பணித்த உங்கள் வாழ்க்கை எங்களுக்கு உத்வேகம் அளிக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.  இதேபோல்  மத்திய உள்துறை மத்திரி அமித்ஷா, “அத்வானி தனது இடைவிடாத முயற்சியால் நாடு முழுவதும் கட்சி அமைப்பை பலப்படுத்தினார். மேலும் அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருந்த போது நாட்டின் வளர்ச்சிக்கு விலை மதிப்பற்ற பங்களிப்பை வழங்கினார்” என்று தெரிவித்துள்ளார்.