ஆசிஸ் மிஸ்ரா ஜாமீன் மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

 
அ

விவசாயிகள் மீது கார் ஏற்றி கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் மத்திய அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் ஆசிஸ் மிஸ்ரா தாக்கல் செய்திருக்கும் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம். 

 உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.  கடந்த 2021 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதத்தில் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.   அப்போது கூட்டத்தினர் மீது கார் ஒன்று மோதியது. அதில் நான்கு விவசாயிகள் உயிரிழந்தனர்.

ச்

 இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் வன்முறையில் ஈடுபட்டார்கள்.  இதில் கார் ஓட்டுனர் மற்றும் இரண்டு பாஜக தொண்டர்கள் மரணமடைந்தார்கள். பத்திரிகையாளர் ஒருவரும் உயிர் இழந்தார்.  

 விபத்து ஏற்படுத்திய காரில் பாஜகவை சேர்ந்த மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய்குமார் இஸ்ராவின் மகன் ஆசிஸ் மிஸ்ரா இருந்தார்.   இதனால் இந்த வழக்கில் ஆசிஸ் மிஸ்ரா உட்பட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ஆசிஸ் மிஸ்ரா தாக்கல் செய்திருக்கும் வழக்கு நீதிபதிகள் சூரியகாந்த், மகேஸ்வரி அடங்கிய அமர்வு விசாரணை நடத்தி வந்தது.

 இந்த விசாரணையில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் ஜாமின் மனு மீதான தீர்ப்பை ஒத்தி வைத்திருக்கிறார்கள் நீதிபதிகள்.