200 காவல் நிலையங்களில் புகார்! நடிகை கேடகி சிதாலே கைது!

 
k

நடிகை கேடகி சிதாலே கைது செய்யப்பட்டுள்ளார் .  200 காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டதால்  அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   சரத்பவார் குறித்து முகநூலில் அவர் வெளியிட்ட கருத்து சர்ச்சை ஆனத அடுத்து இவ்வாறு கைது செய்யப்பட்டு இருக்கிறார்.  

மராத்தி நடிகை கேடகி சிதாலே.  இவர்,  யாரோ ஒருவர் பதிவு செய்திருந்த கருத்தினை பதிவு செய்ததாக, சரத்பவார் குறித்து கருத்தினை பதிவிட்டிருந்தார். அந்த பதிவில்,  ‘’ நீங்கள் பிராமணர்களை வெறுக்கின்றீர்கள்.  உங்களுக்கு நரகம் காத்துக் கொண்டிருக்கிறது’’ என்று இருக்கிறது.

ts

 இந்த முகநூல் பதிவுக்கு தேசிய காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.    இதனால் தானே,  புனே உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் காவல் நிலையத்தில்புகாரளித்தனர்.   மகாராஷ்டிரம் மாநில முழுவதும் 200 காவல் நிலையங்களில் நடிகை கேடகி சிதாலே மீது புகார் அளித்திருந்தனர்.

 வீட்டு வசதி துறை அமைச்சர்,   200 காவல் நிலையங்களில் நடிகைக்கு எதிராக புகார் அளிப்பதை உறுதி செய்திருந்தார்.   சரத்பவார்  குறித்து அவதூறு  பரப்பியதாக நடிகையை கைது செய்ய காங்கிரஸ்  மாவட்ட தலைவர் வலியுறுத்தி வந்தார்.

 தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்,   அவதூறு பரப்பி விளம்பரத்தை பெற முடியும் என்பதை மராட்டிய பாஜகவிடமிருந்து நடிகை கற்றுக் கொண்டிருப்பார் என்று விமர்சித்துள்ளார். 

 இந்த நிலையில் போலீசார் நடிகை கேடகி சிதாலே மீது  அவதூறு உள்ளிட்ட பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்து செய்திருந்தனர்,   கல்வா போலீசார் நடிகை கேடகி சிதாலே மீது அவதூறு பரப்புவது உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்திருந்தனர்.  அதே நேரம்குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து நடிகை கேடகி சிதாலேவை கைது செய்துள்ளனர்.