கண்ணீர்விட்டு அழுத மடாதிபதி சிவமூர்த்தி - மாணவிகள் பாலியல் வழக்கில் சிறையிலடைப்பு

 
s

மாணவிகள் பாலியல் புகாரில் கைதான மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணருவுக்கு செப்டம்பர் 14ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டிருக்கிறது.

கர்நாடக மாநிலம் சித்திரதுர்காவில் முருக மடத்தின் மடாதிபதியாக இருந்தவர் சிவமூர்த்தி முருகா சரணரு.  இரண்டு மாணவிகள் கொடுத்த பாலியல் வழக்கில் சித்திர துர்கா புறநகர் போலீசார் இவரை கைது செய்தனர்.   மூன்று நாட்கள் போலீசார் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க சித்திரதுர்கா நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது .  அதன்படி மடாதிபதி சிவமூர்த்தியை மூன்று நாட்கள் தங்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

u

 இதற்கிடையில் மடாதிபதியின் ரத்தம், தலைமுடி, சிறுநீர் தடை அறிவியல் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது . மடாதிபதி சிவமூர்த்தியை நேற்று சித்திரை துர்கா மடத்திற்கு போலீசார் அழைத்துச் சென்று சோதனை நடத்தினர்.   அங்கே மடாதிபதி பயன்படுத்திய அறை, கழிவறை, அலுவலகம் கூட்டம் நடைபெறும் இடத்தில் சோதனை நடந்தது.   இந்த சோதனையின் போது மடாதிபதி சிவமூர்த்தியிடம் போலீசார் சில கேள்விகளை கேட்டுள்ளனர்.  ஆனால் அதற்கு மடாதிபதி எந்த பதிலும் அளிக்கவில்லை என்று தகவல்.

 மடாதிபதி சிவமூர்த்தியை போலீசார் மடத்திற்கு அழைத்து வந்து இருப்பது பற்றி அறிந்ததும் 15க்கும் மேற்பட்ட மடாதிபதிகள் முருக மடத்திற்கு சென்று சிவமூர்த்திக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.   அப்போது சிவமூர்த்தி கண்ணீர் விட்டு அழுததாக சொல்லப்படுகிறது.  

மடத்தில் உள்ள பூஜை அறைக்கு சென்ற சிவமூர்த்தி சாமி தரிசனம் செய்துள்ளார்.   மடத்தின் ஊழியர்களுக்கு ஆசி வழங்கியுள்ளார்.   மடாதிபதி சிவமூர்த்தியை மடத்திற்கு அழைத்துச் செல்லும் முன்னதாக மடத்திற்கு வர பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.  மடத்தைச் சுற்றியிலும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 

sm

 மடத்தில் சோதனை ஆய்வு முடிந்ததும் மடாதிபதி காவல் அதிகாரி அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.   அங்கு வைத்து மடாதிபதியிடம்  விசாரணை நடத்தியுள்ளனர்.  அங்கும் போலீசார் கேட்ட கேள்விகளுக்கு எந்த பதிலும் அளிக்காமல் மௌனமாக இருந்து உள்ளார்.  

இந்நிலையில்,  மடாதிபதியின் மூன்று நாட்கள் போலீஸ்காவல் இன்றுடன் நிறைவு பெற்றது.  இதை அடுத்து மடாதிபதி சிவமூர்த்தியை இன்று காலை 11 மணிக்கு சித்ரதுர்கா செசன்ஸ் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தினர்.   பின்னர் மடாதிபதியே மீண்டும் தங்களது காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க கோரினர். 

மடாதிபதியின் ஜாமின் மனு மீதான விசாரணையும் இன்று நடைபெற்றதால்,  மடாதிபதியின் உடல் நல குறைவை காரணங்காட்டி அவருக்கு ஜாமீன் வழங்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது.  ஆனால் அதே நேரம் பாலியல் வழக்கில் மடாதிபதிக்கு வரும் 14ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிடப்பட்டிருக்கிறது.