மும்பைக்கு வந்த அதிர்ஷ்டம், லிஸ் டிரஸ் தற்போது இங்கிலாந்து பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.. ஆதித்யா தாக்கரே

 
ஆதித்யா தாக்கரே (நடுவில்), லிஸ் டிரஸ் (இடது ஒரம்)

மும்பைக்கு வந்த அதிர்ஷ்டம்தான் லிஸ் டிரஸ் தற்போது இங்கிலாந்து பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் ஆதித்யா தாக்கரே தெரிவித்தார்.


இங்கிலாந்தின் ஆளும் கன்சர்வேடிவ் கட்சயிின் அடுத்த தலைவராக வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய வம்சாவளியும் முன்னாள் நிதியமைச்சருமான ரிஷி கணக்கை தோற்கடித்து  லிஸ் டிரஸ் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், மும்பைக்கு வந்த ராசிதான் லிஸ் டிரஸ் தற்போது இங்கிலாந்து பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார்.

ஆதித்யா தாக்கரே

உத்தவ் தாக்கரே பிரிவு சிவ சேனாவின் எம்.எல்.ஏ.வும், மகாராஷ்டிராவின் முன்னாள் அமைச்சருமான ஆதித்யா தாக்கரே டிவிட்டரில், லிஸ் டிரஸ் இங்கிலாந்தின்பிரதமராக கன்சர்வேடிவ்கள் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள். அவர் இந்தியா-இங்கிலாந்து உறவை முன்னெடுத்து செல்வார். வலுவான உறவுகளை உருவாக்குவார், வரவிருக்கும் காலங்களில் இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை விரிவுப்படுத்துவார் என்று நம்புகிறேன். லிஸ் டிரஷ் கடந்த மார்ச் மாதம் மும்பை வந்திருந்தார். அப்போது அமைச்சராக இருந்த ஆதித்யா தாக்கரே, லிஸ் டிரஸூடன் உரையாடியதை நினைவு கூர்ந்தார்.

லிஸ் டிரஷ் உடன் ஆதித்யா தாக்கரே

 இங்கிலாந்து பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரஸ் முதலில் நம்மை (மும்பை) வர்த்தக செயலாளராக பார்வையிட்டார், பின் இங்கிலாந்து திரும்பியதும் வெளியுறவு செயலாளராக உயர்த்தப்பட்டார். அதன் காரணமாக அவரது (லிஸ் டிரஸ்) இரண்டாவது வருகையின்  காரணமாக மும்பை அவருக்கு எப்படி அதிர்ஷ்டம் என்று நான் குறிப்பிட்டேன். அடுத்த உயரம் ஆச்சரியப்பபடுவதற்கில்லை! இன்று அவர் இங்கிலாந்தின் பிரதமர் என பதிவு செய்துள்ளார்.