தாடி வைத்தால், தொப்பி அணிந்தால் எல்லா முஸ்லிம்களும் ஜிஹாதிகளாக மாறிவிட்டார்கள் என்று அர்த்தமல்ல. ... பத்ருதீன் அஜ்மல்

 
பத்ருதீன் அஜ்மல்

யாராவது தாடி வைத்தால் அல்லது தொப்பி அணிந்தால் எல்லா முஸ்லிம்களும் ஜிஹாதிகளாக மாறிவிட்டார்கள் என்று அர்த்தமல்ல என்று அசாம் முதல்வருக்குபத்ருதீன் அஜ்மல்  பதிலடி கொடுத்தார்.

அசாம் மாநிலம் மொரிகானில் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்ததால் கைது செய்யப்பட்ட முஸ்தபா என்ற முப்தி முஸ்தபாவால் நடத்தப்பட்ட  ஜாமியுல் ஹூதா மதரஸாவை அரசு இடித்தது.  இது தொடர்பாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கடந்த தினங்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாநிலம் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் மையமாக மாறி வருகிறது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. அசாமில் ஏற்கனவே 800 அரசு மதரஸாக்களை ஒழித்து விட்டோம். ஆனால் மாநிலத்தில் பல குவாமி மதரஸாக்கள் உள்ளன.  குடிமக்கள், பெற்றோர்கள் இந்த மதரஸாக்களில் என்ன வகையான பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன என்பதை கண்காணிக்க வேண்டும் என தெரிவித்தார். மதரஸா தொடர்பான அசாம்  முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் கருத்துக்கு ஏ.ஐ.யு.டி.எப். கட்சி தலைவர் பத்ருதீன் அஜ்மல் பதில் கொடுத்துள்ளார்.

ஹிமந்தா பிஸ்வா சர்மா

ஏ.ஐ.யு.டி.எப். கட்சி தலைவர் பத்ருதீன் அஜ்மல் கூறியதாவது: மதரஸாக்களில் உள்ள தீய சக்திகள் மீது எங்களுக்கு எந்த அனுதாபமும் இல்லை. அவர்களை எங்கு கண்டாலும் சுட வேண்டும். மதரஸாக்களில் 1-2 மோசமான ஆசிரியர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அரசாங்கம்  தடுப்பு காவல்களை விதித்து விசாரணை முடிந்தவுடன் அவர்களை அழைத்து செல்ல வேண்டும். அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். பயங்கரவாதி ஒரு பயங்கரவாதி. பயங்கரவாதிகள் இந்துவாகவோ அல்லது முஸ்லிமாகவோ இருக்க முடியாது. யாராவது தாடி வைத்தால் அல்லது தொப்பி அணிந்தால் எல்லா முஸ்லிம்களும் ஜிஹாதிகளாக மாறிவிட்டார்கள் என்று அர்த்தமல்ல. ஒவ்வொரு மதரஸாவும் ஜிஹாதி என்று அர்த்தமல்ல. நமது நாட்டில் லட்சக்கணக்கான மதரஸாக்கள் இயங்கி வருகின்றன. 1947ல் நடைபெற்ற சுதந்திர போராட்டத்தில் மதரஸா மாணவர்களும் பங்கேற்றுள்ளனர் என்பதை முதல்வர் (ஹிமந்தா பிஸ்வா சர்மா) அறிந்து கொள்ள வேண்டும். 

மதரஸா

மாணவர்கள் கூட உயிர் தியாகம செய்தனர். ஆங்கிலேயர்களுக்கு எதிராக முதன் முதலில் போராடத் தொடங்கியவர்கள் முஸ்லிம் உலமாக்கள் என்பதை அவர் அறிந்து கொள்ள வேண்டும். வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் இருந்து யாராவது வந்தால் அவர்களை எல்லையில் நிறுத்துவது யாருடைய பொறுப்பு, அவற்றை  இந்திய அரசு கவனித்து வருகிறது. ராணுவமும், எல்லை பாதுகாப்பு படையும் என்ன செய்து கொண்டிருக்கின்றன?  இவற்றுக்கு கோடி  கோடியாக செலவழிக்கப்பட்டது. எல்லையில் மட்டும் ஏன் அவர்களை நிறுத்துவதில்லை? அவர்களை எல்லையில் கொல்லுங்கள், வெளியில் இருந்து வந்து இங்கு சதி செய்பவர்கள் மீது எங்களுக்கு எந்த அனுதாபமும் இல்லை. அந்த சதிகாரர்களை கொல்லுங்கள் ஆனால் மதரஸாவை அவதூறு செய்யாதீர்கள். இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை மட்டும் இழிவுபடுத்துவதால் அவர்களை தண்டிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.