பா.ஜ.க.வின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு எதிர்ப்பு.. சட்ட ஆணையத்தில் பதில் அளித்த ஆம் ஆத்மி

 
ஒரே நாடு ஒரே தேர்தல்

மத்திய பா.ஜ.க. அரசின் ஒரு நாடு ஒரே தேர்தல் முன்மொழிவுக்கு ஆம் ஆத்மி கட்சி எதிர்ப்பு  தெரிவித்து தனது பதிலை சட்ட ஆணையத்திடம் ஆம் ஆத்மி சமர்ப்பித்துள்ளது. 

நாட்டில் ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டம் குறித்து அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடம் இருந்து கருத்துக்களை கேட்டு சட்ட ஆணையம் கடந்த மாதம் பொது அறிவிப்பை வெளியிட்டது. மத்திய பா.ஜ.க. அரசின் ஒரு நாடு ஒரே தேர்தல் முன்மொழிவுக்கு ஆம் ஆத்மி கட்சி எதிர்ப்பு  தெரிவித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி தனது பதிலை சட்ட ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது. இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் அதிஷி கூறியதாவது: இந்த முன்மொழிவின் கீழ் ஒரே நேரத்தில் மத்திய மற்றும் மாநில தேர்தல்களை நடத்த முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தங்கள் அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பின் மீதான தாக்குதலாகும்.

சட்ட ஆணையம்

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அந்த திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டில் சட்ட ஆணையம் யோசனையை பகுப்பாய்வு செய்து, அதை ஆதரிக்கும் 175 பக்க அறிக்கையை வெளியிட்டது. 2022 டிசம்பரில் சட்ட கமிஷன் அறிக்கையை பங்குதாரர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் பகிர்ந்து  கொண்டது.  ஆம் ஆத்மி 12 பக்க பதிலை சமர்ப்பித்துள்ளது. முன்மொழிவில் பல பகுதிகள் உள்ளன. அவை கொள்கையின் எந்த அடிப்படையும் இல்லை. தொடக்கத்திலேயே நாடாளுமன்றத்துக்கு அரசியலமைப்பை திருத்தும் அதிகாரம் உள்ளது, ஆனால் அதன் அடிப்படை கட்டமைப்பை மாற்ற முடியாது, கேசவானந்த் பாரதி வழக்கின் முக்கிய தீர்ப்பில் உச்ச நீதிமன்றத்தின் 13 நீதிபதிகள் கொண்ட அமர்வு உறுதி செய்தது.

அதிஷி

நாடாளுமன்றம் /சட்டப்பேரவை தொங்கும் பட்சத்தில் (எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில்) பிரதமர் மற்றும் முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக முன்மொழியப்பட்ட அமைப்பு நடைமுறைக்கு சாத்தியமற்றது, ஆபத்தானது மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் அமைப்பு ரீதியிலான விலகலுக்கு வழிவகுக்கும். வளமும், பணமும் நிறைந்த கட்சிகள் பணபலம் மற்றும் ஆள் பலத்தின் உதவியுடன் மாநிலங்களின் பிரச்சினைகளை ஒடுக்கும். மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால் வாக்காளர்களின் முடிவு பாதிக்கப்படும். ஆம் ஆத்மி தனது பதிலை சட்ட ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது. சட்ட ஆணையம் கட்சியின் கருத்துக்களை பக்கச்சார்பற்ற மற்றும் பாரபட்சமற்ற முறையில் ஆய்வு செய்யும் என்று ஆம் ஆத்மி நம்புகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.