இயக்குநர் ராஜமவுலியை கொலை செய்ய உருவாகி இருக்கும் குழு

 
ர

பிரபல திரைப்பட இயக்குநர் ராஜமவுலியை கொலை செய்ய ஒரு குழு திட்டமிட்டு உருவாகி இருப்பதாக இயக்குநர் ராம்கோபால் வர்மா  சொல்லி இருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 பாகுபலி,   ஆர். ஆர்.ஆர். படங்களின் மூலம் இந்திய சினிமாவில் மிகுந்த கவனம்  பெற்ற இயக்குநராக மாறியிருக்கிறார் ராஜமௌலி.   இவர் இயக்கிய ஆர். ஆர்.ஆர். படத்தின் நாட்டுக்கூத்து பாடலுக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்திருக்கிறது.   மேலும் ஆஸ்கர் விருக்கான இறுதி பரிந்துரை பட்டியலில் 6 பிரிவுகளில் ஆர். ஆர்.ஆர். படம் தேர்வாகலாம் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.

ர்

 இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் கவனம் பெற்று வருகிறார் இயக்குனர் ராஜமவுலி.  பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் உடன் உரையாடிய வீடியோவும் அழைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 இது குறித்து சத்தியா, ரங்கீலா , கம்பெனி உள்ளிட்ட பரவால படங்களை இயக்கிய இயக்குனர் ராஜ கோபால் வருமா சொன்ன கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 

 பெரும்பாலும் சர்ச்சை மன்னனாக இருப்பவர் ராம்கோபால் வர்மா .  அவர் பிரபல இயக்குனர்கள் ஆசிப் , ஷோலே இயக்கிய ரமேஷ் சிப்பி போன்ற திரைப்பட ஜாம்பவான்கள் , ஆதித்ய சோப்ராக்கள்,  கரன்ஜோகர்கள்,  பன்சாலிகள் உள்ளிட்ட இயக்குனர்களை எல்லாம் நீங்கள் மிஞ்சி விட்டீர்கள் . அதற்காக உங்களை வணங்குகிறேன் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

ர்

 மேலும்,  நான் உட்பட பொறாமை கொண்ட திரைப்பட தயாரிப்பாளர்கள் உங்கள் கொலை செய்ய ஒரு குழுவை உருவாக்கி இருக்கிறார்கள் .  அதனால் நீங்கள் உங்கள் பாதுகாப்பை பலப்படுத்திக் கொள்ளுங்கள்.   அந்த குழுவில் நானும் ஒரு பகுதி என்று குறிப்பிட்டு இருக்கிறார்.   நகைச்சுவைக்காக ராம்கோபால் வர்மா இப்படி ஒரு கருத்தை பதிவிட்டாலும் இது ரசிகர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.