இந்தியாவில் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு

 
corona patient

கேரளாவில் குரங்கு அம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் இன்று தெரிவித்துள்ளார். 

குரங்கம்மை தொற்றின் அறிகுறிகள்! - Malainaadu.lk

உலகச் சுகாதார நிறுவனம் அளித்த தகவலின்படி, உலக அளவில் 63 நாடுகளில் 9,000க்கும் அதிகமானோருக்குக் குரங்கம்மை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று இந்தியாவிலும் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று கண்அறியப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளாவுக்கு வந்த நபரை திருவனந்தபுரம் விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர். அவருக்கு குரங்கம்மை அறிகுறி இருந்ததை அடுத்து, அவரது ரத்தமாதிரிகள் புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன. 

அதன்பின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது, இதுகுறித்து கேரள சுகாதாரத்துறாஇ அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறுகையில், “கேரளாவில் ஒருவருக்கு குரங்கம்மை உறுதியாளியுள்ளது. இதுபற்றி கவலைப்படவோ, கவலைப்படவோ ஒன்றுமில்லை. அனைத்து பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன, நோயாளி உடல்நிலை சீராக உள்ளாது. அவரது தந்தை, தாய், ஒரு டாக்சி டிரைவர், ஆட்டோ டிரைவர் மற்றும் அருகிலுள்ள இருக்கைகளில் இருந்து 11 சக பயணிகள் உள்ளிட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது” எனக் கூறினார்.