காரில் சாய்ந்து நின்ற சிறுவனை மார்பில் எட்டி உதைத்த கார் உரிமையாளர்!

 
car

காரில் சாய்ந்து நின்ற 6 வயது குழந்தையை எட்டி உதைக்கும் காரின் உரிமையாளரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி வைரலான நிலையில், எட்டி உதைத்தவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். 


கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலைச்சேரியில் இஷாத் என்பவர் குடும்பத்தோடு கடைவீதிக்கு சென்றுள்ளார். தனது காரை கடைவீதியில் ஓரமாக நிறுத்தி சென்றுள்ளார். திரும்பி வந்தபோது கார் மீது 6 வயது சிறுவன் சாய்ந்து நின்றிருப்பதை பார்த்து ஆத்திரமடைந்த அவர், கார் மீது சாய்ந்து நின்று கொண்டிருந்த சிறுவனின் இடுப்பு மீது காலால் எட்டி உதைத்தார். நடப்பது என்னவென்று தெரியாமல் நின்று கொண்டிருந்த குழந்தை அப்பாவித்தனமாக அங்கிருந்து நகர்ந்து சென்றது.இதை பார்த்த பொதுமக்கள் காரின் உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு போலீசாரும் வந்து விசாரணை நடத்தினர். கார் மீது சாய்ந்து நின்று கொண்டிருந்த குழந்தையை எட்டி  உரிமையாளர் எட்டி உதைத்த சிசிடிவி வீடியோ வெளியான நிலையில், சிறுவனை எட்டி உதைத்த இஷாத் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.