தூங்க விடாமல் குழந்தை அழுது கொண்டே இருந்ததால் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த கொடூர தாய்

 
c

தூங்கவிடாமல் குழந்தை அழுது கொண்டே இருக்கிறது என்பதற்காக ஆத்திரப்பட்ட அந்த கொடூரத்தாய் பெற்ற குழந்தையை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்திருக்கிறார்.   பஞ்சாப் மாநிலத்தில் நடந்திருக்கிறது இந்த அதிர்ச்சி சம்பவம்.

 பஞ்சாப் மாநிலத்தில் லூதியானாவை சேர்ந்தவர் ரூபிந்தர் கவுர்.  இந்த பெண் கணவனை பிரிந்து தனது மூன்று குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்திருக்கிறார். சம்பவத்தன்று ரூபிந்தர் கவுரின் மூன்றாவது குழந்தை ஹர்மன்(3) தொடர்ந்து அழுது கொண்டே இருந்திருக்கிறது.   இது ரூபிந்தருக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. 

ஃப்

 குழந்தையை சமாதானப்படுத்தி இருக்கிறார்.   ஆனாலும் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால்,  தன்னால் தூங்க முடியவில்லை என்று கடும் ஆத்திரம் அடைந்திருக்கிறார்.   உடனே ஆவேசமாக எழுந்து வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து குழந்தை ஹர்மன் மீது ஊற்றி தீ வைத்திருக்கிறார்.  தீப்பிடித்து எரிந்ததும் குழந்தை கதறி இருக்கிறது.

 குழந்தையின் கதறல் சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.   பின்னர் அவசர அவசரமாக குழந்தையின் தீயை அணைத்து குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள்.   50 சதவிகித  தீக்காயங்களுடன் குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 சம்பவம் குறித்து அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து ரூபிந்தர் கவுரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 தூங்க விடாமல் அழுது கொண்டே இருக்கிறது என்பதற்காக பெற்ற குழந்தையை மண்ணெண்ணெய் ஊற்றி  எரித்த தாயின் கொடூர செயலால் அதிர்ந்து போயிருக்கிறது லூதியானா.