இந்திய எல்லைக்குள் துப்பாக்கியுடன் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை

 
LAC

ஜம்மு காஷ்மீரில், இந்திய எல்லைக்குள் துப்பாக்கியுடன் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியரை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். 

பாகிஸ்தான் பகுதிகளிலிருந்து டிரோன்கள் மூலம் போதைப் பொருள்கள் மற்றும் ஆயுதங்கள் இந்திய எல்லைக்குள் கடத்தப்படுவது தொடர்காதையாகி வருகிறது. இதனை தடுத்து நிறுத்தும் வகையில், பாதுகாப்பு படை வீரர்கள் எல்லையில், தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுட்டு வருகின்றனர். இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் இன்று காலை 8 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, பாகிஸ்தான் பகுதியிலிருந்து இந்திய எல்லையை நோக்கி துப்பாக்கியுடன் ஒருவர் வந்துள்ளார். அவரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் தடுத்துள்ளனர். ஆனால், அந்த நபர் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் எச்சரிக்கையை மீறி இந்திய எல்லையை நோக்கி தொடர்ந்து முன்னேறினார். இதனையடுத்து பாதுகாப்பு நடவடிக்கையாக அந்த நபரை பாதுகாப்புப் படையினர் சுட்டு கொன்றனர். அவரை போல் வேறு யாரும் ஊடுருவ முயற்சித்துள்ளனரா என பாதுகாப்பு படை வீரர்கள் எல்லைப் பகுதி முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.