டெல்லியில் நைஜீரியா நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு குரங்கம்மை

 
monkeypox

டெல்லியில் நைஜீரியா நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது

கொரோனா வைரஸை தொடர்ந்து தற்போது குரங்கம்மை நோய் உலகை அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் குரங்கம்மையின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதேபோல் குரங்கம்மை நோய் உலக சுகாதார அவசரநிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இந்தியாவையும் அந்த நோய் விட்டு வைக்கவில்லை. முதல் முதலில் கேரள மாநிலத்தில் கடந்த ஜூலை மாதம் குரங்கம்மை பாதிப்பு இருப்பது தெரியவந்தது. நேற்று வரை இந்தியாவில்  12 பேருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. டெல்லியில் 7 பேருக்கும், கேரளாவில் 4 பேருக்கும் தெலங்கானாவில் ஒருவருக்கும் குரங்கம்மை நோய் உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

monkeypox negative


 
இந்த நிலையில் டெல்லியில் நைஜீரியா நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் எல்.என்.ஜெ.பி. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குரங்கம்மை பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு நபர் டெல்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே டெல்லியில் நைஜீரியா நாட்டை சேர்ந்த மூன்று பேருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டது குறிப்பிடதக்கது. இதன் காரணமாக இந்தியாவில் குரங்கம்மை மொத்த பாதிப்பு 13 ஆக உயர்ந்து உள்ளது. அதிகபட்சமாக டெல்லியில் இதுவரை 8 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.