லக்னோவில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 9 பேர் பலி..

 
லக்னோவில் சுவர் இடிந்து விழுந்து 9 பேர் பலி..

 உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் கட்டிட  சுவர் இடிந்து விழுந்து 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  

லக்னோவில் சுவர் இடிந்து விழுந்து 9 பேர் பலி..

வடமாநிலங்களில் கடந்த சிஉல உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் தில்குஷா கன்டோன்மென்ட் பகுதியில்  கனமழை காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த இடிபாட்டில் சிக்கி  3 சிறுவர்கள் உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த  2 பேர்  மீட்கப்பட்டு   லக்னோ சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகாலை 3 மணிக்கு இந்த சம்பவம் நிகழ்ந்ததாக  தெரிகிறது.  பின்னர் தகவலறிந்து உடனடியாக நிகழ்விடத்திற்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ சூர்ய பால், நேரில் சென்று பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார்.  

லக்னோவில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 9 பேர் பலி..

தில்குஷா பகுதியில் ராணுவ குடியிருப்பை ஒட்டி சில தொழிலாளர்கள் குடிசை அமைத்து வசித்து வந்ததாகவும்,  இந்நிலையில் கடுமையான மழை காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து குடிசைகள் மீது விழுந்து விபத்து ஏற்பட்டதாகவும் காவல்துறை இணை ஆணையர் பியுஷ் மோர்டியா  தெரிவித்தார். அத்துடன்  இதில் 9 பேர் உயிரிழந்ததாகவும்,  ஒருவரை கட்டிட இடிபாடுகளுக்கு இடையே இருந்து பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.  இந்நிலையில்  கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணத் தொகை வழங்க உத்தரப் பிரதேச   முதல்வர்  யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருக்கிறார்.  லக்னோவில் பெய்துவரும்  தொடர் கனமழை காரணமாக அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அம்மாவட்டத்திற்கு கனமழைக்காக  ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.