ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தம் - நாடு முழுவதும் விமான சேவை பாதிப்பு

 
tn

நேற்றிரவு முதல் இன்று காலை வரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் 70க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

flight
நேற்றிரவு முதல் இன்று காலை வரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் 70க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்தாகியுள்ளன. ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தத்தால் நாடு முழுவதும் விமான சேவை பாதிப்படைந்துள்ளன. விமான நிறுவனத்தின் பணியாளர்கள் சிலர் கடைசி நேரத்தில் விடுப்பு எடுத்ததால் ரத்து செய்யப்பட்டுள்ளன. முன்னறிவிப்பின்றி ஏர் இந்தியா விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றச்சாட்டியுள்ளனர். 

tn

பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு முழு தொகையும் திரும்ப அளிக்கப்படும் என்று  ஏர் இந்தியா நிறுவனம் உறுதியளித்துள்ளது. ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தத்தால் நாடு முழுவதும் விமான சேவை பாதிப்படைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.   தங்களுக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் விடுப்பு எடுத்துள்ளனர்.  அதோடு தங்களது மொபைல் ஃபோன்களையும் சுவிட்ச் ஆப் செய்து வைத்துள்ளனர் . இந்த ஊழியர்களை தொடர்பு கொள்ள ஏர் இந்தியா நிறுவனம் முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நிறுவன ஊழியர்களின் நடத்தும் முறையில் சமத்துவம் இல்லை என்று ஊழியர்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இழப்பீடு சார்ந்த முக்கிய தொகுப்பில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் ,  நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்றும் அதற்குரிய பணிக்கான பொறுப்பில் தாங்கள் பணியமத்தப்படவில்லை என்றும் ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.