லிப்ட் அறுந்து விழுந்து 8 பேர் பலி.. காவல்துறைக்கு உடனே தெரிவிக்காதது ஏன்?? உறவினர்கள் கேள்வி..

 
 லிப்ட் அறுந்து விழுந்து 8 பேர் பலி..  காவல்துறைக்கு உடனே தெரிவிக்காதது ஏன்?? உறவினர்கள் கேள்வி..

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில்   8 பேர்  நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.  

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஆஸ்பயர்-2 என்கிற அடுக்குமாடி கட்டிடத்தின்  கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.  தனியாருக்கு சொந்தமான இந்த கட்டடத்தில் இன்று வழக்கம் போல் பணியாளர்கள் வேலை செய்து வந்துள்ளனர். அப்போது திடீரென அந்த உயரடுக்கு மாடிக் கட்டிடத்தில் இருந்த  லிஃப்ட் அறுந்து விழுந்துள்ளது. இதில்  8  தொழிலாளர்கள் நிகழ்விடத்திலேயே  உயிரிழந்தனர்.   மேலும்  லிஃப்ட்  இடிபாடுகளில்  சிக்கி படுகாயமடைந்த ஒருவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

 லிப்ட் அறுந்து விழுந்து 8 பேர் பலி..  காவல்துறைக்கு உடனே தெரிவிக்காதது ஏன்?? உறவினர்கள் கேள்வி..

இந்த விபத்தானது  காலை 7.30 மணியளவில் நடந்துள்ளதாகவும்,  ஆனால் 11 மணியளவிலே  போலீசாருக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து கட்டட  உரிமையாளரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் , விபத்தில் சிக்கி  சஞ்சய் பாபுபாய் நாயக், ஜெகதீஷ் ரமேஷ்பாய் நாயக், அஷ்வின்பாய் சோமாபாய் நாயக், முகேஷ்பாய் பாரத்பாய் நாயக், முகேஷ் பாரத்பாய் நாயக், ராஜ்மல் சுரேஷ்பாய் கராடி, பங்கஜ்பாய் சங்கர்பாய் கராடி  உள்ளிட்ட  8 தொழிலாளர்கள் உயிரிழந்தாக அடையாளம் காணப்பட்டு  பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  

 லிப்ட் அறுந்து விழுந்து 8 பேர் பலி..  காவல்துறைக்கு உடனே தெரிவிக்காதது ஏன்?? உறவினர்கள் கேள்வி..

விபத்தில் உயிரிழந்த 8  கூலித்தொழிலாளர்களும்  வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.  இந்நிலையில்  விபத்து நடந்த உடனேயே காவல்துறைக்கு ஏன் தெரிவிக்கவில்லை என்றும்,  தாமதமாக தெரிவிக்க காரணம் என்ன என்றும்  கட்டடத்தில் வேலை செய்த ஊழியர்களின் உறவினர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.  இற 8 பேரது  உடல்களும்  பிரேத பரிசோதனைக்காக  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.