புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு - ரூ.75 நாணயத்தை வெளியிடவுள்ள ஒன்றிய அரசு!

 
tn

புதிய நாடாளுமன்ற கட்டிடம்  திறக்கப்படுவதை கொண்டாடும் விதமாக, ரூ.75 நாணயத்தை வெளியிடவுள்ளது ஒன்றிய அரசு.

தலைநகர் டெல்லியில் செயல்பட்டு வரும் நாடாளுமன்ற கட்டிடம் 1927 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது . இங்கு தற்போது பாதுகாப்பு குறைபாடு, இடவசதி ஆகியவை ஏற்பட்டுள்ளதன் காரணமாக,  புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல்  நாட்டினார்.ரூ. 970 கோடி ரூபாய் செலவில் நான்குமாடிக்கொண்ட முக்கோண வடிவிலான கட்டடமாக சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில் புதிய நாடாளுமன்றம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.  மக்களவையில் 888 பேரும் , மாநிலங்களவையில் 300க்கும் மேற்பட்டோரும் அமரும் வகையிலும் ,  இரு அவை பங்கேற்கும் கூட்டுக் கூட்டத்தின் போது 1280 உறுப்பினர்கள் வரை அமரும் வகையில் இந்த கட்டிடம் வசதி படைத்ததாக கட்டப்பட்டுள்ளது.  வருகிற 28ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். 

tn

இந்நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்படுவதை கொண்டாடும் விதமாக ரூபாய் 75 நாணயத்தை மத்திய அரசு வெளியிட உள்ளது.  இந்த நாணயத்தில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் மற்றும் நாடாளுமன்ற வளாகத்தின் படங்கள் இடம்பெறும் என்று மத்திய நிதியமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

tn

புதிய நாணயத்தின் ஒருபுறம் அசோகா சின்னமும்,  மறுபுறம் சத்தியமேவ ஜெயதே என்ற வார்த்தையும் இடம் பெற உள்ளது.  இடதுபுறத்தில் பாரத் என்ற வார்த்தை தேவனகிரியிலும் இந்தியா என்ற வார்த்தை ஆங்கிலத்தில் வலது புறமாகவும் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்திய ரூபாய் சின்னம் மற்றும் 75 என்ற எண் அசோகா சின்னத்தின் கீழ் இடம்பெறும் என்றும் நாணயத்தின் மற்றொரு புறத்தில் பாராளுமன்ற கட்டிடத்தில் படம் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் பாராளுமன்ற வளாகம் என்ற வார்த்தையும் நாணயத்தில் பொறிக்கப்படுகிறது.  சுமார் 44 மில்லி மீட்டர் சுற்றளவு கொண்ட வட்ட வடிவான நாணயத்தில் 200 பற்கள் அடங்கிய டிசைன் இடம் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 35 கிராம் எடை கொண்டிருக்கும் புதிய நாணயம் 50 சதவீதம் சில்வர், 40 சதவீதம் செம்பு, ஐந்து சதவீதம் நிக்கல் மற்றும் ஐந்து சதவீதம் ஜிங்க் ஆகியவை கொண்டு உருவாக்கப்படுகிறது.