68வது தேசிய விருது : 5 விருதுகளை அள்ளிய ‘சூரரைப்போற்று’ திரைப்படம்..

 
  சூர்யாவின் ‘சூரரைப்போற்று’..

2020 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படங்களுக்கான  68-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  விருது பெற்ற திரைப்படங்களின் விவரங்களை பார்க்கலாம்.. இந்த விருது பட்டியலில் தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரைப்போற்று’ திரைப்படம் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைக்கதை ஆகிய 5 விருதுகளை  குவித்துள்ளது.

“சிறந்த நடிகர்:  2020 ஆம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான தேசிய விருது,  இரண்டு நடிகர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழில்  சூரரைப்போற்று படத்துக்காக நடிகர் சூர்யாவுக்கும், இந்தியில்  'தி அன்சங் வாரியர்' படத்துக்காக  நடிகர் அஜய் தேவ்கன்னுக்கும் சிறந்த நடிகருக்கான தேசிய விருது  அறிவிக்கப்பட்டிருக்கிறது.  

இந்தியில் வேறு பெயரில் வெளியாகும் ‘சூரரைப்போற்று’… ரிலீஸ் எப்போது தெரியுமா ?

சிறந்த நடிகை:  ‘சூரரைப்போற்று’ படத்துக்காக  அபர்ணா பாலமுரளிக்கு  வழங்கப்படுகிறது.

சிறந்த  துணை நடிகர் (பெண்):  சிவரஞ்சனியும் சில பெண்களும் படத்துக்காக லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  

68வது தேசிய விருது :  5 விருதுகளை அள்ளிய ‘சூரரைப்போற்று’ திரைப்படம்..

சிறந்த தமிழ்ப் படம்:  இயக்குநர் வசந்த் இயக்கிய, சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருது 'சிவரஞ்சனியும் சில பெண்களும்' படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  இதேபோல்  சிறந்த மலையாளப் படமாக 'திங்கலஞ்ச நிச்சயம்' (Thinkalazhcha Nishchayam) படம் தேர்வாகியுள்ளது.

சிறந்த இசையமைப்பாளர் (பின்னணி இசை):  தமிழில் 'சூரரைப்போற்று' படத்தின்  இசைக்காக ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு  விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

68வது தேசிய விருது :  5 விருதுகளை அள்ளிய ‘சூரரைப்போற்று’ திரைப்படம்..

சிறந்த  எடிட்டிங்: 'சிவரஞ்சினியும் சில பெண்களும்' படத்துக்காக எடிட்டர் ஸ்ரீகர்பிரசாத் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  

சிறந்த திரைக்கதை:  'சூரரைப்போற்று' திரைப்படத்தின் சிறந்த திரைக்கதைக்காக  ஷாலினி உஷா நாயர் மற்றும் சுதாகொங்காரா இருவருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த திரைக்கதை, வசன எழுத்தாளர்: 'மண்டேலா' படத்தின் சிறந்த திரைக்கதை வசன எழுத்தாளர் விருது மடோன் அஸ்வினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

68வது தேசிய விருது :  5 விருதுகளை அள்ளிய ‘சூரரைப்போற்று’ திரைப்படம்..

சிறந்த அறிமுக இயக்குநருக்கான இந்திரா காந்தி விருது:  தமிழில் யோகிபாபு நடிப்பில் வெளியான மண்டேலா படத்துக்காக,  அதன் இயக்குநர் மடோன் அஸ்வினுக்கு வழங்கப்பட உள்ளது.  

சிறந்த ஸ்டண்ட் விருது:  'அய்யப்பனும் கோஷியும்' படத்துக்காக ராஜசேகர், மாஃபியா சசி மற்றும் சுப்ரீம் சுந்தர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

68வது தேசிய விருது :  5 விருதுகளை அள்ளிய ‘சூரரைப்போற்று’ திரைப்படம்..

சிறந்த இசையமைப்பாளர் விருது: தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான வெளியான 'ஆலா வைகுந்தபுரமுலோ' படத்தின் இசையமைப்புக்காக இசையமைப்பாளர் தமன்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  

சிறந்த   பின்னணி பாடகர் ( பெண்) : 'அய்யப்பனும் கோஷியும்' படத்தில் பாடிய நாட்டுப்புற பாடலுக்காக  நஞ்சம்மாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த ஆண் பின்னணி பாடகர் விருது ராகுல் தேஷ் பாண்டே 'மீ வசந்தராவ்' மராத்தி படத்துக்கு அறிவிக்கப்பட்டது.

68வது தேசிய விருது :  5 விருதுகளை அள்ளிய ‘சூரரைப்போற்று’ திரைப்படம்..

சிறந்த உறுதுணை நடிகர்: அய்யப்பனும் கோஷியும் படத்துக்காக பிஜூ மேனனுக்கு அறிவிக்கப்பட்டது.

சிறந்த இயக்குநர்: அய்யப்பனும் கோஷியும் படத்தை இயக்கிய கே.ஆர்.சச்சிதானந்தனுக்கு (மறைவு) சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது அறவிக்கப்பட்டுள்ளது.”