தேர்தல் ஆணையம் காணவில்லை என மீம்ஸ் - ஆணையர் விளக்கம்

 
tt

உலகில் எந்த நாடுகளிலும் இல்லாத வகையில் 64 கோடியே 20 லட்சம் வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களித்துள்ளனர்.

election commision

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களை சந்தித்த போது, உலகின் எந்த நாட்டிலும் இல்லாத வகையில், மக்களவைத் தேர்தலில் 64.2 கோடி மக்கள் வாக்களித்துள்ளனர். 10,000 கோடி மதிப்பிலான இலவசங்கள், போதைப்பொருட்கள், மதுபானங்கள், ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன  ஜம்மு காஷ்மீரில் கடந்த 4 தசாப்தங்களில் இல்லாத வகையில் அதிகமாக வாக்குப்பதிவாகியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் எந்த பெரிய கலவரமும் இன்றி வாக்குப்பதிவு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது 2019ல் 540 இடங்களில் மறுவாக்குப்பதிவு நடந்த நிலையில் இந்தமுறை 39 இடங்களில் மட்டுமே மறுவாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. நாளை நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கைக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை இடைவிடாது சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்படும். தேர்தல் ஆணையத்தைக் காணவில்லை என பகிரப்பட்ட மீம்ஸ்களை நாங்கள் பார்த்தோம். நாங்கள் எங்கும் காணாமல் போகவில்லை; இங்குதான் இருக்கிறோம். என்றார். முன்னதாக வாக்குப்பதிவில் உலக சாதனை படைத்ததற்காக செய்தியாளர் சந்திப்பில் இந்தியத் தேர்தல் ஆணையர்கள் திடீரென எழுந்து நின்று கைதட்டினர்.