குஜராத் கள்ளச்சாராய விவகாரம் - 6 போலீசார் சஸ்பெண்ட்

 
suspend

குஜராத்தில் கள்ளச்சாராயம் அருந்தி பலர் உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் இரண்டு பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

குஜராத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில் அங்கு சட்ட விரோதமாக மது விற்பனை மற்றும் கள்ளச்சாராய மோகம் அதிகரித்துள்ளது.  இந்த சூழலில் அகமதாபாத் மாவட்டம் போட்டட் மாவட்டங்களில் கள்ள சாராயம் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில்,  கள்ள சாராயம் அருந்திய பலர் கடந்த 25ம் தேதி மயங்கி விழுந்தனர். இதையடுத்து உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.  அத்துடன் பலர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. கள்ள சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 28 ஆக உயர்ந்துள்ளது.  இது குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.  இந்த சம்பவம் தொடர்பாக கள்ள சாராயம்  தயாரிக்க தேவையான ரசாயனத்தை கொடுத்தவர், கள்ள சாராயத்தை விற்றவர் ஆகியோர் உட்பட 5  பேரை காவல்துறையினர் இதுவரை கைது செய்துள்ளனர்.

gujarat

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பொடாட் மற்றும் அகமதாபாத் காவல்துறை கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் மற்றும் 6 காவலர்களை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  இதுகுறித்து உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜ்குமார் கூறியதாவது:- போடாட் எஸ்பி கரன்ராஜ் வகேலா மற்றும் அகமதாபாத் ஸ்பி வீரேந்திரசிங் யாதவ் ஆகியோரை இடமாற்றம் செய்துள்ளோம். இரண்டு துணை எஸ்பிகள் உள்பட ஆறு போலீஸ் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.