சந்திரபாபு கைதானதை அறிந்த 6 பேர் மாரடைப்பால் மரணம்

 
சந்திரபாபு கைதானதை அறிந்த 6 பேர் மாரடைப்பால் மரணம்

ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு கைதானதை அறிந்த 6 பேர் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Image

ஆந்திர மாநில முதலமைச்சராக 2014-2019 ஆண்டு காலத்தில் சந்திரபாபு நாயுடு   செயல்பட்டபோது கிராமப்புறங்களில் வேலை இல்லாத இளைஞர்கள் தொழில் பயிற்சி வழங்குவதற்காக தொடங்கப்பட்ட திறன் மேம்பாட்டு திட்டத்தில் ரூ. 317 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக சந்திரபாபு நாயுடு மீது குற்றப் புலனாய் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து இருந்தனர். வழக்கின் அடிப்படையில் நேற்று காலை 6 மணியளவில் ஆந்திரா மாநிலம் நந்தியலாவில் அவரை குற்றப் புலனாய்வு போலீசார் கைது செய்தனர். சந்திரபாபு நாயுடு கைது செய்ததை கண்டித்து  தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் ஆந்திரா, தெலுங்கானா மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் வன்முறையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் அனந்தபூர் மாவட்டத்தைச் சேர்ந்த வட்டே ஆஞ்சநேயுலு (65) சந்திரபாபு கைது செய்யப்பட்டதை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். டாக்டர் அம்பேர்கார்  கோனசீமா மாவட்டத்தில் சந்திரபாபு பாபு கைது செய்யப்பட்டதை தனது பேரனின் செல்போனில் பார்த்துக் கொண்டிருந்த காகரா சுகுணம்மா (65), செல்லுபோயின நரசிம்ம ராவ் (62) ஆகியோர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தனர். விஜயநகரம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி பைடிதள்ளி (67) மாரடைப்பால் உயிரிழந்தார்.

கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த கோடாலி சுதாகர் ராவ் (60) சந்திரபாபு கைது செய்யப்பட்ட செய்தியை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்தார். திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியை சேர்ந்த வெங்கடரமண (46) என்பவரும் சந்திரபாபு கைது செய்யப்பட்ட செய்தியை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தபோது அதிர்ச்சியில் கோமா நிலைக்கு சென்று மாரடைப்பால் உயிரிழந்தார்.