காஷ்மீரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 6 பேர் பலி

 
Bus Accident

காஷ்மீரில் பயணிகள் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேஎர் உயிரிழந்த நிலையில், 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 

காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் சூரன்கோட் பகுதியில் இருந்து ரஜோரி மாவட்ட தலைநகர் நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த பேருந்தில் ஓட்டுநர், நடத்துனர் மற்றும் பயணிகள் என சுமார் 30 பேர் பயணம் செய்தனர். ரால்யோட் பகுதியில் அந்த பேருந்து சென்றுகொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். போலீசார், ராணுவம் மற்றும் சுகாதார துறையினர் ஆகியோர் உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். படுகாயமடைந்தவர்களில் சிலர் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.