ஷேர் ஆட்டோ மீது அதிவேகத்தில் மோதிய தனியார் பேருந்து - 6 பெண்கள் பலி!

 
accident

ஆந்திர மாநிலத்தில் தனியார் பேருந்தும் ஷேர் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 6 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 5 பேர் படுகாயம் அடைந்தனர். 

ஆந்திர மாநிலம் அமராவதி மாவட்டத்தில் உள்ள அனந்தபுரம் அருகே தனியார் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்துகொண்டிருந்தது. இந்த நிலையில், எதிரே ஷேர் ஆட்டோ ஒன்று 10க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்துகொண்டிருந்தது. இந்த நிலையில், அதிவேகத்தில் வந்துகொண்டிருந்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த ஷேர் ஆட்டோ மீது அதிபயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் ஷேர் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கிய நிலையில், அதில் பயணம் செய்தவர்களுக்கு பலத்த அடி ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த 6 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்த நிலையில், அவர்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

விபத்து குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விபத்துக்குள்ளான ஷேர் ஆட்டோ மற்றும் பேருந்தை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தார். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் தனியார் பேருந்து அதிவேகத்தில் வந்ததே விபத்துக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.