ஒடிசாவில் பேருந்து மீது லாரி மோதி விபத்து - 6 பேர் பலி

 
accident

ஒடிசாவில் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஒடிசா மாநிலம் ஜார்சுகுடா-சம்பல்பூர் பிஜு விரைவு சாலையில் டிரக் ஒன்று நிலக்கிரி ஏற்றுக்கொண்டு வந்துகொண்டிருந்தது. அப்போது அதே பகுதியில் பயணிகள் பேருந்து ஒன்று 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், திடீரென கட்டுப்பாட்டை இழந்த டிரக் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இறந்தவர்கள் ஆலையில் தங்கள் வேலையை முடித்துவிட்டு பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பெரும்பாலான ஊழியர்கள் பலத்த காயமடைந்த நிலையில், 10 பேர் சம்பல்பூர் புர்லாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். படுகாயமடைந்தவர்களில் சிலர் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.