கோவாவில் 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழா

 
g

53 வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நாளை தொடங்குகிறது.  

 மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகத்தின் சார்பில் நாளை கோவாவில் 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடங்குகிறது.   வரும் 28ஆம் தேதி வரைக்கும் இந்த திரைப்பட விழா நடைபெறும்.

go

 இந்த திரைப்பட விழாவில் 25 திரைப்படங்கள் திரையிடப்பட இருக்கின்றன.   சூர்யா நடித்த ஜெய் பீம்,  குரங்கு பெடல், ரா வெங்கட் இயக்கிய கிடா படங்கள் திரையிடப்படுகின்றன.   ராஜமவுலி இயக்கத்தில் வந்த ஆர். ஆர்.ஆர்.   இந்த திரைப்பட விழாவில் திரையிடப்படுகின்றன.

 சினிமா திரைப்படக்கலை,  தொழில்நுட்பத்தை பறைசாற்றும் வகையில் கண்காட்சிக்கும் இந்த திரைப்பட விழாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.  நவம்பர் 21ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையிலும் காலை 11 மணி முதல் மாலை 6:00 மணி வரையிலும் கோவாவில் உள்ள கலா அகாடமிக்கு அருகே கால்பந்து மைதானத்தில் இந்த கண்காட்சி நடைபெறுகிறது.