டெல்லியில் 50 கிலோ ஹெராயின் பறிமுதல் - ஒருவர் கைது!!

 
tn

டெல்லியில் 50 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

arrest

போதைப்பொருட்களின் புழக்கம் என்பது தற்போது அதிகரித்து விட்டது. கொரோனா  காரணமாக மாணவர்கள் வீட்டிலிருந்து ஆன்லைன் வகுப்புகளில் ஈடுபட்டு வந்த நிலையில் ஆசிரியர்களிடமும், சக மாணவர்களுடன் உரையாடும் வாய்ப்புகள் இல்லாமல் போனது . பொது முடக்கத்துக்கு  முன்பு கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி மிக சிறிய அளவில் பள்ளி மாணவர்கள் கூட போதைப்பொருட்களை மாய வலைக்குள் சிறைப்பட்டு இருந்தார்கள்.  தற்போதைய இளைய தலைமுறை  போதைப் பொருளை நோக்கி நகரும் நிலை ஏற்பட்டுவிடக்கூடாது.  இளைஞர்கள் போதை மருந்துகளை பயன்படுத்தும் சம்பவங்கள் எங்கோ மூலையில் சொகுசு கப்பல் மட்டும் நடக்கவில்லை.  நம்மை சுற்றி அத்தகைய சம்பவங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளது.

tn

இந்த சூழலில் தலைநகர் டெல்லி ஷாஹின்பாக் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து ரூபாய் 100 கோடி மதிப்புள்ள 50 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  ஷாஹின்பாக் பகுதியில் ஒரு வீட்டில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தேசிய போதைப் பொருட்கள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் அங்கு தீவிர சோதனை நடத்தப்பட்டது.  இதன் மூலம் 50 கிலோ ஹெராயின் 30 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  ஒருவரை கைது செய்ததுடன் அவரிடம் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்படுவதாக  தேசிய போதைப்பொருள் தடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.