மட்டன் சாப்பிட்ட 5 வயது சிறுமி உயிரிழப்பு - 8 பேர் மருத்துவமனையில் அனுமதி

 
மு

மட்டன் சாப்பிட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  அதில் ஐந்து வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 ஆந்திர மாநிலத்தில் அல்லூரி சீதாராம ராஜ் மாவட்டம்.  இந்த மாவட்டத்தில் அரக்கு கனேலா கிராமத்தில் தடக பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் நேற்று முன்தினம் இரவு மட்டன் சமைத்து சாப்பிட்டு இருக்கிறார்கள். பின்னர் இரவில் தூங்கி இருக்கிறார்கள்.

ச்

 நள்ளிரவில் ஒவ்வொருவருக்கும் வாந்தி எடுத்து பேதி போயிருக்கிறது.  9 பேரின் உடல்நிலையும் மிகவும் மோசமடைந்ததை அடுத்து கிராமத்தினர் அவர்களை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொண்டு போய் சேர்த்து உள்ளார்கள் . இதில் 5 வயதான சிறுமி மீனாட்சி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நேற்று உயிரிழந்திருக்கிறார்.

 இதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக 8 பேரும் விசாகப்பட்டினத்தில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்கள். 

 இச்சம்பவம் குறித்து அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 மட்டன் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் , அதில் ஐந்து வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவமும் ஆந்திர மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.