ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் பலி- குடிபோதையால் நேர்ந்த விபரீதம்

விசாகப்பட்டினத்தில் இருந்து இரும்பு லோடு ஏற்றி சென்ற லாரி ஓட்டுநர் குடிபோதையால் கட்டுபாட்டை இழந்து ஆட்டோ மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் பலியாகினர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து இரும்பு லோடு ஏற்றி வந்த லாரி ஒன்று அதிவேகமாக வந்த ஐதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை ஓட்டி வந்த டிரைவர் குடிபோதையில் அதிவேகமாக ஓட்டு கொண்டு தெலங்கானா மாநிலம் வாரங்கள் - கம்மம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது மாமுனூர் அருகே புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சென்று கொண்டுருந்த ஆட்டோ மீது பின்னால் இருந்து மோதியது. திடீரென பிரேக் போட்டதால் லாரி கவிழ்ந்தது. லாரியில் இருந்து இரும்பு கம்பங்கள் ஆட்டோ மீது விழுந்தன. விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வாரங்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு சிறுவன் உயிரிழந்தார். மேலும் மூன்று பேர் உயிருக்குப் போராடி வருகின்றனர்.
இறந்தவர்கள் அனைவரும் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்தவர்கள் என்பதும் அவர்கள் அனைவரும் வாரங்கல் புறநகர் பகுதியில் கூடாரம் அமைத்து கூலி வேலை செய்து குடும்பம் நடத்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டதால் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே விழுந்திருந்த இரும்புக் கம்பங்கள் கனரக கிரேன்கள் உதவியுடன் அகற்றப்பட்டு, லாரி அங்கிருந்து ஒதுக்கி நகர்த்தப்பட்டது. இதனால் அவ்வழியாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.