டெல்லி: சுவர் இடிந்து விழுந்து 5 பேர் உயிரிழப்பு, 9 பேர் படுகாயம்

 
5 dead and 9 injured after wall collapses in Delhi

தலைநகர் டெல்லி பதர்பூர் எல்லை அலிபூரில் உள்ள சௌஹான் தரம்கடா அருகே உள்ள பகௌலி கிராமத்தில் இன்று கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 8 அடிக்கும் உயரமான சுவர் இடிந்து விழுந்ததில் பலர் சிக்கி உள்ளனர். இடிபாடுகளில் சிக்கி இருந்த ஒன்பது பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவருடைய உடல் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  

Image

அதே நேரத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் சுவர்களின் ஈடுபாடுகள் சிக்கி இருந்தவர்களை மீட்டபோது நான்கு பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.  மேலும் சம்பவ இடத்தில் ஈடுபாடுகள் சிக்கியிருந்த அனைவருமே மீட்க பட்டு விட்டதாகவும் இருப்பினும் தொடர்ச்சியாக மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. முதல் கட்டமாக அலிபூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட தகவலின் படி பழைய சுவர் என்பதால் இடிந்து விழுந்து இருக்கலாம் எனவும் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையின் காரணமாக இத்தகைய விபத்து நேரிட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Image

சம்பவ இடத்தில் மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்து குறித்து உடனடியாக விசாரணை நடத்தி விபத்திற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் காவல்துறைக்கு உத்தரவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.